Saturday, June 10, 2017

ஆன்மீக ஒழுக்கம்


பாபா கூறினார், " நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவையல்லவோ! இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக இருக்கும்.
ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே ஆன்மீக ஒழுக்கம் ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.. 
முதல் காரியமாக, ஆசைகளிலிருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும் ; கிடைக்க வேண்டியது கிடைக்கும். 
இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின்மீது தியானம் செய்யும். இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்திலிருந்து சிகைவரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக."

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...