Tuesday, June 13, 2017

அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன் !!!



என் அன்புக் குழந்தையே!
உன் வாழ்க்கையில் நிகழும் அனைத்திற்கும் ஓரு காரணம் உண்டு. நீ நல்லதாய் நினைத்தால் நல்லது. எல்லாம் நீ பார்க்கும் பார்வையில்தான் உள்ளது. உன் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் இருந்தால், நான் உனக்குக் கூறும் அறிவுரை கேள். அதற்குள்  இப்படி ஆகிவிட்டது என்று புலம்பாதே. 
அப்படி நீ புலம்பும் போது என் அறிவுரையின் ஓசையை உன்னால் உணர முடியாது. நிதானமாக உன் மனத்தை பக்குவப்படுத்து. பிறகு முடிவு செய். உன்னிடம் என்ன இல்லை? என்ன எல்லாம் இருக்கிறது. பிறகு ஏன் இப்படி வெறுமையாய் இருக்கிறாய்?  உன் மனதில் சந்தோஷம் இருக்கிறது, நிம்மதி இருக்கிறது. 
ஆனால் நீயேன் அதைத் துளைத்து கொண்டு, தேவையில்லாதைப் பற்றி நினைத்து, உனக்குள் நீயே கோபப்பட்டுக் கொண்டு, ஏன் உன் வாழ்க்கையை இப்படி வேதனை உள்ளதாய் மாற்றி இருக்கிறாய்? உனக்கான எல்லாம் உனக்கு வரும். அதற்கு முன் உன் மனதில் நீயே  எந்தவித நிகழ்வுகளையும் கற்பனை செய்யாதே. அது நல்லதோ கெட்டதோ. அது வேண்டாம். 
உன் நிம்மதியை குலைக்க கற்பனை என்னும் ஓர் தீக் குச்சி போதும்.  நிகழ் காலத்தின்  நிஜத்தை மறைத்த நிழல் போல காகிதத்தை பற்ற வைத்துவிடும் அதனால் கற்பனை செய். நிகழ் காலத்தை மட்டும். எதிர்காலத்தை கற்பனை செய்து அதில் துளைந்துவிடாதே. 
கற்பனை என்னும் கூட்டத்தில் உன்னுடன் உன் உயிராக நான் கலந்து உள்ளேன் உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை என்னை விட்டு நீ விலகிப் போகும் படி நான் செய்வதும் இல்லை என் அன்புக்கு உரிய குழந்தை நீ.  உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...