Tuesday, June 20, 2017

உன்னைக் கண்கலங்க விட மாட்டேன்!

என் அன்பு குழந்தையே!
உன் வாழ்க்கையில், இதுவரை நீ பயணித்தப் பாதையினை நான் பார்க்கிறேன். சந்தோஷம், நிம்மதியினை விட,  கஷ்டமும், கண்ணீரும்  இருப்பதை, என்னால் உணர முடிகிறது. உன்னைத் தேற்றுவதற்காகத்தான் நான் இங்கு, எல்லாம் சரி செய்து கொண்டு இருக்கிறேன்.
உன் வாழ்க்கையின் சுவடுகளை திருத்தி எழுத, உன் கர்மவினைகளுடன் நான் போராடி வருகிறேன். அதை நன்றாக நீ உணர்கிறாய் அல்லவா? உன் கண்ணீரை, உன்னை உண்மையாக நேசித்தவர்களுக்காக சிந்து. அதில் தவறு இல்லை. ஆனால்,  உன்னைத் துளி கூட மதிக்காது,  ஏளனமாய் பார்ப்பவர்களுக்காக,  கண்ணீர் என்னும் பொக்கிஷத்தை சிந்தாதே. உன் வலியினை,  உன் சாய் அப்பாவாகிய நான்,  எப்படி புரிந்து கொள்ளாமல் இருப்பேன்.  உனக்கு மனவலியை ஏற்படுத்தப்பட்டதற்கு நியாயம் கேட்கிறாய். அதற்கு நான் நிச்சயம் நியாயம் வழங்குவேன்.
அது வரைக்கும்,  நீ பொறுமையாய், நம்பிக்கையுடன் இரு.  உனக்கான காலத்தை நான் உருவாக்கி விட்டேன்.  இன்னும் சில நாட்களில்,  அதில் நீ பயணம் செய்ய போகிறாய்.  உன்னைக் கண்கலங்க விட மாட்டேன்.  நீ கண் கலங்கினால்,  என் மனம் வலிக்கிறது.  உன்னை நிச்சயம்,  நான் செம்மைப்படுத்தி உயர்த்துவேன்.  உன் அம்மாவாக அப்பாவாக நான் எப்போதும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய் அப்பா!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...