ஒரு நாள் மத்தியான நேரத்தில் சீரடி மசூதியின் துனியில் (நெருப்புக் குண்டம்) உள்ள நெருப்பு பிரகாசமாக எரியத் தொடங்கியது. அதனுடைய ஜ்வாலை மசூதியின் விட்டத்தை அடைந்தது. மசூதியில் அமர்ந்திருந்த மக்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தண்ணீரை அதன்மீது ஊற்றுவதா, அல்லது ஜ்வாலையைத் தணிப்பதற்கு வேறெதுவும் செய்வதா என பாபாவைக் கேட்க அவர்களில் யாருக்கும் துணிவு வரவில்லை.
ஆனால் சிறிதுநேரத்தில் பாபா, அங்கு என்ன நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டார். தமது சட்காவை (கையில் வைத்திருக்கும் குச்சி) எடுத்து முன்னுள்ள ஒரு தூணின் மீது ஓங்கியடித்து, "கீழிறங்கி, அமைதியாய் இரு" என்றார். ஒவ்வொரு தடியின் அடிக்கும் ஜ்வாலை கீழிறங்கத் தொடங்கி சில நிமிடங்களில் குறைந்து துனி அமைதியாகவும்,சாதாரணமாகவும் ஆகியது.
இவரே " நமது சாயி” கடவுளின் அவதாரமாவார். தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் அவர் ஆசீர்வதிக்கிறார். தினந்தோறும் பக்தியுடன் சாய்பாபாவின் கதைகளை படிப்பவர்கள் எல்லாக் கேடுகளில் இருந்தும் விடுபடுவார்கள்.
இதுமட்டுமன்று ,எப்போதும் சாயியின் மேல் பக்தியுடையவராகவும், அன்புடையவராகவும் இருந்து வெகு விரைவில் கடவுள்காட்சியைப் பெறுவர். எல்லா ஆசைகளும் நிறைவேறியவராக ,அவாவற்றவராக இறுதியில் உயர்நிலை எய்துவர்.
இதுமட்டுமன்று ,எப்போதும் சாயியின் மேல் பக்தியுடையவராகவும், அன்புடையவராகவும் இருந்து வெகு விரைவில் கடவுள்காட்சியைப் பெறுவர். எல்லா ஆசைகளும் நிறைவேறியவராக ,அவாவற்றவராக இறுதியில் உயர்நிலை எய்துவர்.
No comments:
Post a Comment