Saturday, June 17, 2017

எல்லாம் வல்ல சாயிபாபா!

பாபாவின் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்,   தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது; பலனை அளிப்பவர்  'எல்லாம் வல்ல சாயிபாபா' என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.           சாயி ஸ்த்சரித்திரம்    
                   
பாபாவுடைய பக்தனாக ஆனவுடன், உண்மையான பக்தனானவுடன், "என்னுடைய பொறுப்பெல்லாம் உன்னுடையது " என்று பூரணமாகச் சரண்புகுந்த பக்தனான பின்னர், பாபா அந்த பக்தனை எட்டு திசைகளிலிருந்தும் சூழ்ந்து நின்று காப்பாற்றுகிறார்.     
                  
என்ன நடக்கிறதோ, அது இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது. அவரே தூக்கிவிடுகிறார்; அவரே தள்ளியும்விடுகிறார், அவரே சண்டைபோடுகிறார், அல்லது மற்றவர்களை சண்டையிடவைக்கிறார். அவரே காரியங்களை செய்பவரும், செய்யவைப்பவரும் ஆவார். -ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...