என்றும் உன்னை காப்பேன்


என் அன்பு குழந்தையே இன்று நீ நினைத்த இடங்கள் எல்லாவற்றிலும் நான் உனக்கு காட்சி கொடுத்தேன் இன்று நடக்க இருந்து ஓரு ஆபத்தில் இருந்து உன்னை காப்பாற்றினேன் பிறகு ஏன் நீ வீணாக  பிதற்றிகொண்டு இருக்கிறாய் என் கரம்பிடித்த நாளில் இருந்தே உன்னை நான் பிள்ளையாக சுமக்கிறேன் உன் விளையாட்டு போக்கை நிறுத்தி கொஞ்சம் வாழ்க்கையில் பொறுணர்ச்சியுடன் வாழு மற்றவர்களை ஏளனமாக கருதாதே அவர்களை கேலி செய்யாதே அவர்களுக்கும் மனம் வலிக்கும் வாழ்க்கையில் உன்னை பற்றி மட்டும் யோசிக்கும் சுயநலவாதியாய் இருக்காதே உனக்கான நேரத்தில் எல்லாம் உன்னிடம் வந்து சேரும் உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை விலகிபோகும் படி நான் செய்வதும் இல்லை நீ என் உயிருக்கு மேலான பிள்ளை இனிமேல் எல்லாம் வெற்றி தான் என் அருளும் ஆசியும் உண்டு உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை காப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
Powered by Blogger.