(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட், அவரது மகன் இருவரும் சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர். அப்போது பாபாவிடம் நடந்த உரையாடல்:
பாபா: தாயே! இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கப்படுகிறேன். சிலருடைய தேவை செல்வம், சிலருக்கு பெண்டிர், சிலருக்கு புத்திரர்கள். அந்தோ! என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை! நானும் பொறுத்து பொறுத்து போகிறேன்; ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன். எனக்கு அலுத்துவிட்டது.
திருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள். பின் எங்கள் கதி என்னாவது?
பாபா: ஏன் கவலை? உங்கள் நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவா? என் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது; அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.
சிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம். தாங்கள் அறிவீர்களல்லவா?
பாபா:ஆம்,உங்களுக்கு அது கிட்டும்.
சிறுவன்:பாபா! அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள்
எடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.
பாபா:இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.
சிறுவன்:பாபா, ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா?
பாபா:ஆஹா உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா? மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம். இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து, ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.

No comments:
Post a Comment