நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Thursday, June 22, 2017

என்னுடைய ஆசிர்வாதங்கள் உன்னுடன் எப்போதும் இருக்கும்


சதா சர்வகாலமும் என்னையே நினைத்து, என் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தாலும், உன் மனதில் ஆழமாக புதைந்துக்கிடக்கும் கவலைகளில் இருந்து, உன்னால் வெளியில் வர இயலாமல் தவிக்கும் நிலையைப் பார்த்து என் நெஞ்சம் பதறுகிறது. நீயும் நான் கூறும் அறிவுரைகளின்படித்தான் நடக்கின்றாய். அதில் குறையில்லை. ஆனால் நடந்து முடிந்தவைகளை உன்னால் மறக்க முடியாமல், நித்தமும் நீ கண்ணீர் விடுவதைப்பார்க்க எனக்கு சக்தியில்லை. 
நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிட்டது. துன்பங்களை எல்லாம் சந்தித்து முடித்துவிட்டாய். நீ வாழவே கூடாது என்று நினைத்தவர்களுக்கு எதிரில் தைரியமாக நின்று சாதிக்கும் நீ, தனிமையில் கோழையைப் போன்று அழுகின்றாய். அழாதே! தைரியமாக இரு.
உன்னை இந்த நிலைக்கு உட்படுத்தியவர்கள் தன் நிலை உணரும் காலத்தை உருவாக்குவேன். நீ இழந்ததையெல்லாம் வேறு வடிவில் உன்னை வந்தடைய வழிவகை செய்வேன். அத்தனைக் கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு சாயியே துணை! சாயியே சாஸ்வதம்இன்னும் என் நிலை இறங்கினாலும் சாயி இருக்கிறார் என்று இருக்கிறாயே, உன்னை நான் எப்படி கைவிடுவேன். நீ பார்த்துக் கொண்டே இரு. உனக்குக் கஷ்டங்களை உருவாக்கியவர்கள் கண் பார்க்க உன்னைக்கோபுரத்தின் உச்சியில் அமர வைக்கின்றேன்.
உன் குழந்தைகளால் உன்னை மேன்மையடையச் செய்கிறேன். என்னை நம்பு. இது என் சத்தியவாக்கு. எல்லாவற்றையும் மனதிற்கு அடியில் புதைத்து வைராக்கியத்துடன் வலம் வா. நீ சாயியின் குழந்தை. உன்னை அசைத்துப் பார்க்கிறவர்களை சாயி அசைத்துப் பார்ப்பார் என்ற நம்பிக்கையுடன் இரு. நீ நிச்சயம் நல்ல நிலைமைக்கு வருவாய். என்னுடைய ஆசிர்வாதங்கள் உன்னுடன் எப்போதும் இருக்கும்.

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்