Friday, June 23, 2017

நான் கைவிடமாட்டேன்

 என்செல்லமகனே!

நான் எனது பக்தர்கள் அனைவரின் அந்தரங்க ஆட்சியாளனாக அவர்களது இதயத்தில் வசிப்பவன். கொஞ்ச நாட்களாகவே நீ உன் வியாபாரத்தில் அடி மேல் அடி வாங்கும் போது, கவனித்துக் கொண்டேதான் வருகிறேன். நெருக்கடிகளில் சிக்கி, நீ சின்னா பின்னமாகும் போது, நீ படும் துயரத்தைக்காண முடியாமல், நான்  ஊமையாக உன்னுடன் வந்துக்கொண்டிருக்கின்றேன். என்றைக்கு  முடியாமல் உன் கோபத்தை என் மேல் காட்டப்போகிறாயோ என்று எதிர்பார்த்திருந்தேன். இன்று கொட்டிவிட்டாய்.

என்னை வணங்குவதால்நம்புவதால் உனக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்று எண்ணிவிட்டாய். அந்த வேதனையில் ஏதேதோ பேசிவிட்டாய். இனி உன் முகத்தில் முழிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டாய். என்இதயம் வலிக்கிறது மகனே. உன்னை இந்த நிலையில் விட்டு விட்டுப் போகவா நான் உன்னுடன் இருக்கிறேன்.

குழந்தைகள் என்ன சொன்னாலும் பெற்றவர்களுக்கு அது பெரிதாகத் தெரியாது நானும் உனது நடவடிக்கைகளை, உன் தந்தையாக நின்று பொறுத்துக் கொண்டேன். நான் நல்லவன் தானே, யாருக்கு என்ன தீங்கு செய்தேன், எனக்கு இந்த நிலை ஏற்பட என்று கதறுகிறாய்.

தசரத ராமன் யாருக்கு தீங்கிழைத்தான்? 14 ஆண்டுகள் வனவாசம் செல்வதற்கு. பொய்யே பேசாத அரிச்சந்திரனுக்கு ஏன் கஷ்டங்கள் வந்தது?  நீ மட்டும் தான் வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கிறாயா? வெளியில் வந்து பார். எத்தனை பேர் எதிர் நீச்சல் போடுகிறார்கள் என்று.

ஒன்று மட்டும் நினைவில் கொள். உன் கர்மவினைகளை நீ தான் கழிக்கவேண்டும். உனக்கு வரவிருந்த பேராபத்துக்களை, வியாபாரத்தில் நஷ்டம் என்ற நிலை வரை திசை திருப்பியிருக்கிறேன். வேறு கஷ்டங்கள் வந்தால் தாங்குவாயா? உன் குடும்பத்தினர் தாங்க மாட்டார்கள்.

ஆனால் என்றும் உன்னை ஒட்டாண்டியாக அடுத்தவனிடம் கை கட்டி நிற்கும்படியான சூழ்நிலையை உனக்குத் தரமாட்டேன். இப்படியாக கொஞ்ச நாள் உன் கஷ்டங்களை சமாளி. அதற்குள் உனக்கு நல்லதொரு திருப்பம் உன் வியாபாரத்தில் ஏற்பட வழிவகை செய்கிறேன். என்னை முழுவதுமாக நம்பு.

என் குழந்தைகளை, என்னை நம்பி அடைக்கலமானவர்களை என்றுமே நான் கைவிடமாட்டேன்.                        

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...