என்னை சரணாகதி அடைந்தால் உன்னை நான் பாதுகாப்பேன்!

மகனே! மகளே!
 'தான்' என்ற அகம்பாவத்தை முற்றிலும் விடுத்து, கருணை, மன்னிக்கும் தன்மை, சேவை மனப்பான்மை, அஹிம்சை போன்ற தெய்வீகக் குணங்களை,  ஒருவர் தமக்குள்  கொண்டுவர முடிந்தால், நான் அவர்களுடன் இருந்து வழிநடத்திச் செல்வேன். 
என்னை  முழுமையாகச் சரணடைந்தவர்கள், எனக்கு  மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். பூஜை, புனஸ்காரங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் இவை யாவும் நம் மனதை நாம் தூய்மைப் படுத்துவதற்கான வழிமுறைகள் மட்டுமே. இருப்பினும், உள்மனது பரிசுத்தமானதாக இல்லையென்றால், எவ்வளவுத்தான் வழிபாடுகள் செய்தபோதிலும் சாயி பக்தர் என்ற தகுதியை அடைய முடியாது. 
தான்  என்ற அகம்பாவத்துடன் எவன் ஒருவனும் என்னைக் காணமுடியாது. என் புனிதமான சமாதியில், என் அனுமதி  இல்லாமல்  எவரையும் நான் அனுமதிக்க மாட்டேன் .

Powered by Blogger.