நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Wednesday, June 7, 2017

நான் உன்னை பாதுகாப்பேன்!மகனே,மகளே தான்  என்ற அகம்பாவத்தை விடுத்து, கருணை, மன்னிக்கும் தன்மை, சேவை மனப்பான்மை, அஹிம்சை போன்ற தெய்வீக குணங்களை ஒருவர் தமக்குள்  கொண்டு வர முடிந்தால்,  நான் அவர்களுடன் இருந்து வழிநடத்திச் செல்வேன்.  என்னை  முழுமையாக சரணடைந்தவர்கள்,  எனக்கு  மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். 
பூஜை, புனஸ்காரங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் இவை யாவும் நம் மனதை நாம் தூய்மைப் படுத்துவதற்கான வழிமுறைகள் மட்டுமே. இருப்பினும், உள்மனது பரிசுத்தமானதாக இல்லையென்றால், எவ்வளவு தான் வழிபாடுகள் செய்தபோதிலும் சாயி பக்தர் என்ற தகுதியை அடைய முடியாது. தான்  என்ற அகம்பாவத்தடன் எவன் ஒருவனும் என்னைக் காணமுடியாது.
என் புனிதமான சமாதியில் என் அனுமதி இல்லாமல்  எவரையும் 
அனுமதிக்க மாட்டேன்.  என்னை சரணாகதி  அடைந்தால் உன்னை நான் பாதுகாப்பேன்

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்