D.R.ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான, திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தாள். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச் சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதும் உண்ணாமலிருக்கும்படியும் கூறினார்.
அவரது அறிவுரைப் படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வாரகாலத்துக்குப் பின் ஒரு நாள் விடியற்காலை இறந்து போனாள். பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே முதன் முறையாக, பாபா காலை எட்டுமணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர்
அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சு விடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப் பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை அவள் விவரித்தாள்; "ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும் பீதியுற்ற நான்,பாபாவின் உதவியை நாடிக்கத்தினேன். பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்கு தூக்கி வந்தார்" என்றாள்.
சாவடியைப் பார்த்திராத அவள், அதைப்பற்றி மிகச் சரியாக விவரித்தாள். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக் கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார்.
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்.
ஓம் சாயிராம்!
No comments:
Post a Comment