Wednesday, June 14, 2017

உழைப்புக்குக்கு கூலி

ஒருநாள் மத்தியான வேளையில், ராதா கிருஷ்ணமாயியின் வீட்டிற்கு அருகில் பாபா வந்து, "எனக்கு ஒரு ஏணி கொண்டுவாருங்கள்" என்று கூறினார்.  சிலர் அதைக் கொண்டு வந்து பாபா குறிப்பிட்டபடி, அதை ஒரு வீட்டுச் சுவரில் சாய்த்து  வைத்தனர்.  
வாமன் கோந்த்கருடைய வீட்டுக் கூரையின் மீது ஏறி, ராதா கிருஷ்ணமாயியின் கூரையின் மீது நடந்து சென்று, மற்றொரு மூலையில் இருந்து கீழே இறங்கினார்.  பாபா எந்தக் குறிக்கோளுடன் இதைச் செய்கிறார் என்பதை ஒருவராலும் அறிய இயலவில்லை.  மலேரியா காய்ச்சலால் ராதா கிருஷ்ணமாயி நடுங்கிக் கொண்டிருந்தாள்.  அதை ஓட்டி விரட்டுதற்பொருட்டே அவர் மேலே ஏறியிருக்கலாம். 
கீழே இறங்கியவுடனே ஏணியைக் கொண்டு வந்தவர்களுக்கு பாபா இரண்டு ரூபாய் கொடுத்தார்.  சிலர் தைரியத்துடன் பாபாவை, ஏன் அவர் இவ்வளவு அதிகம் பணம் கொடுத்தார் எனக் கேட்டனர்.  அதற்கு அவர் ஒருவரும் மற்றவர்களின் உழைப்பை வெறுமையாக பெற்றுக் கொள்ளக்கூடாது என்று கூறினார்.  
உழைப்பவனுக்கு அவனுக்கு உரியவைகள் ஒழுங்காகவும், தாராளமாகவும் கொடுக்கப்பட வேண்டும்.  பாபா அறிவுறுத்திய இக்கொள்கை பின்பற்றப்பட்டால், அதாவது உழைப்பிற்கான கூலி ஒழுங்காகவும், திருப்திகரமாகவும் அளிக்கப்பட்டால் தொழிலாளர்கள் இன்னும் சிறப்பாக வேலை செய்வார்கள்.  தொழிலாளர்களும், முதலாளிகளும் இலாபம் அடைவார்கள்.  இழுத்து மூடுவதற்கோ (lock-out) வேலை நிறுத்தங்களுக்கோ இடமேயில்லை.  தொழிலாளி, முதலாளி மனஸ்தாபமும் இல்லை. 
                                  சாயி சத்சரிதம் அத்தியாயம்-18/19

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...