ஈயாயினும் எறும்பாயினும் சரி, ஆண்டியாயினும், அரசனாயினும் சரி, கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகம் அனைத்தும் என்னுடைய வெளிப்பாடே. நகரும் நகராப் பொருட்கள் நிறைந்த இந்த அளவிட முடியாத சிருஷ்டி என்னுடைய நிஜ ரூபமே. ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
மாயை மிகவும் பலமானது. ஆனால் இறைநாமமோ அதைவிட சக்தி வாய்ந்தது. இறை நாமம் ஒன்றே உய்யும் வழி. மாயையை வெல்ல இறைவனிடம் விசுவாசம் தவிர்த்து வேறொரு சாதனை இல்லை.
ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள். இல்லாவிட்டால் நான் செய்யும் அற்புதங்களின் காரணமாகவாவது என் மீது நம்பிக்கை வைத்து, என் நாமத்தை துதி செய்யுங்கள். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி உங்கள் பிரார்த்தனை அனைத்திற்கும் பதில் கொடுப்பதற்காகவே நான் அவதரித்து வந்தவன் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
No comments:
Post a Comment