ஒவ்வொரு சாய் பக்தரும் அறியவேண்டிய விஷயம் தத்த குரு பரம்பரை.
ஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர். பிரம்மா விஷ்ணு சிவனின் அவதாரம் ஸ்ரீ
தத்தாத்ரேயர். குருவிற்க்கெல்லாம்
குருவானவர். எப்போதும் வாழும் அவதாரமும் ஆவார். குரு பரம்பரை என்பது தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே
தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்கிட வழி வகுத்தார். திருமூர்த்திகளின்
அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார்.
இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு
இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில்
செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும்
போன்றவற்றை நடைமுறையில் எடுத்துக் காட்டவே
தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாகவும் அவருடைய சிஷ்யராகவும் பல அவதாரங்களை
எடுத்துக் காட்டி உள்ளார்.
தத்தாத்திரேயரே
ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நரசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும்,
ஷீரடி சாயிபாபா,
மானிக் பிரபு போன்ற
பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார். இவர்களில் ஸ்ரீ
நரசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளே ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளாக பிறப்பை எடுத்தார் என்றும்
சிலர் நம்புகிறார்கள்.
ஸ்ரீ தத்தர் வழி வந்த குருமார்களை உள்ளடங்கியதே தத்த பரம்பரை. நமது
சத்குரு ஸ்ரீ சாய்பாபா குரு பரம்பரையின்
கடைசி குரு ஆவார். குரு பரம்பரையில் உள்ள ஒவ்வொரு குருமார்களை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.
1.ஸ்ரீஸ்ரீபாத ஸ்ரீவல்லபா. (1300 A .D )
ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம். தந்தை ஸ்ரீ அப்பளராஜா ஷர்மா, தாய் பதிவிரதை சுமதிக்கு மூன்றாவது மகனாக ஆந்திர மாநிலம் கோதாவரியில் உள்ள பித்தாபுரத்தில் பிறந்தார். தனது
பாதங்களில்சங்கு சக்கர முத்திரைகளை கொண்டதாலேயே இப்பெயரால்அழைக்கப்பட்டார்.
2. ஸ்ரீநரசிம்ம சரஸ்வதி சுவாமிகள். (AD 1378 to 1459)
கலியுகத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயரின்
இரண்டாவது அவதாரமாகும்.
தந்தை ஸ்ரீ மாதவ், தாய் அம்பா பவானிக்கு மகாராஷ்டிர மாநிலம் கரஞ்சபூரில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் அழுவதற்கு மாறாக 'ஓம் ' என்னும் பிரணவமந்திரத்தை உச்சரித்தவர்.
3. மாணிக் பிரபு.1817 A .D
தந்தை ஸ்ரீ மனோஹர நாயக ஹரகுடே, தாய் ஸ்ரீ பய தேவி, தொடர்ந்து 16 வருடங்கள் குருச்சரித்திரத்தை பாராயணம் செய்ததன் பலனாக, குரு தத்தாத்ரயரே நேரில்
காட்சி அளித்து தானே அவர்களுக்கு மகனாக பிறப்பதாக உறுதியளித்து, மகாராஷ்டிரா மாநிலம், கல்யானுக்கு அருகில் உள்ள லத்வந்தி என்னும் கிராமத்தில் பிறந்தார். தனது 48 வது வயதில் ஜீவசமாதி அடைந்தார்.
4.அக்கல்கோட்ஸ்ரீ சுவாமி சமர்த்தர்.1900 AD.
ஸ்ரீ தத்தரின் 4 வது அத்தியாயம். இவரின் பிறப்பு தாய்
தந்தை பற்றிய குறிப்புகள் இல்லை. குருச்சரித்திரத்தில் 2 வது அவதாரம் ஸ்ரீ நரசிம்மசரஸ்வதி
அவர்கள் 1458 ம் ஆண்டு கர்தாளிவனத்தில் மஹாசமாதி அடைந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 300 ஆண்டுகள் கழித்து
ஒரு மரம் வெட்டியின் கோடாரி மரம் வெட்டும்பொழுது தவநிலையில் இருந்த ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் தவறுதலாக விழுந்தது. அங்கிருந்து எழுந்த அந்த தெய்வீக புருஷரே ஸ்ரீ தத்தரின் அடுத்த
அவதாரமாக ஸ்ரீ சுவாமி சமர்த்தர் என்று
அழைக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment