அப்பா துணை நிற்பேன்!!!

 என் அன்பு குழந்தையே!
உன்னைப் பற்றி நான் மிகவும் கவலைப் படுகிறேன்.  என் பிள்ளை ஏன் இப்படி கண்ணாடித் துண்டு போல் இருக்கிறாள் என்று.  கண்ணாடியானது சிறிய தவறாலும் கீழே விழுந்து உடைந்து போகும் தன்மை கொண்டது. அது  போல் நீயும் இருக்கிறாய்.
யாராக இருந்தாலும் சிறியதாக உன்னை காயப்படுத்தினால்,  உன் மனம் உடைந்து போகிற அளவுக்கு நீ இருக்கிறாய்.  உன் தன்மையை மாற்ற நான் போராடிக் கொண்டு இருக்கிறேன்.
யாராகினும்  உன் மனதை ரணப்படுத்தி பார்க்கச் செய்யும் சிறியச்சொல்  சொன்னாலும்,  நீ அதை கண்டு கொள்ளாதே.  அவர்கள் சொன்னால் அது உண்மையாகாது.  ஆதலால் நீ அதை கண்டு கொள்ளாதே.  உனக்கு பக்கபலமாக என்றும் நான் இருப்பேன்.  உனக்கான எல்லா வெற்றியும் தேடித் தருவேன்.  உன் அம்மாவாக அப்பாவாக என்றும் நான் துணை நிற்பேன்!!!
Powered by Blogger.