Skip to main content

பாலாஜீ நெவாஸ்கர்


சீரடி கிராமவாசியான ரகு பாடீல் என்பவர் ஒரு சமயம் நெவாஸா கிராமத்திற்குச் சென்று, பாலாஜீ பாடீல் நெவாஸ்கரின் விருந்தாளியாக அவருடைய இல்லத்தில் தங்கியிருந்தார்.
ஒருநாள் இரவு, மாடுகள் எல்லாம் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த நேரத்தில், அந்த  மாட்டுக் கொட்டகைக்குள், ஒரு நல்லபாம்பு புகுந்து 'புஸ்என்று சீறியது.
இந்த ஆபத்தான நிலையில் மாடுகள் மாட்டிக்கொண்டதைக் கண்ட அனைவரும் என்ன செய்வதென்று தெரியாது விழித்தனர். பாம்போ படமெடுத்த நிலையில் அங்கு சுகமாக அமர்ந்துகொண்டது.
மாடுகளோ நிலைகொள்ளாது அங்கிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றன. ஆயினும் வந்திருப்பது ஸாயீயே என்று நெவாஸ்கர் தீவிரமாக நம்பினார்.   மாடுகளை அவிழ்த்து விடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியே இல்லை. மாடுகளில் ஒன்று தப்பித்தவறி பாம்பை மிதித்துவிட்டால் கூட பெரும் நாசம் விளையும்.
தூரத்தி­லிருந்து நல்லபாம்பைப் பார்த்த நெவாஸ்கர், தலைகால் புரியாமல் மகிழ்ச்சியடைந்தார். உணர்ச்சிவசத்தால் அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது. நல்லபாம்பை ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
''பாம்பு ரூபத்தில் பாபா நமக்குப் பேட்டி அளிக்க வந்திருப்பது, ஸாயீயின் கிருபா கடாட்சமேஎன்று சொன்னார். பிறகு, பாம்பிற்கு ஒரு கிண்ணம் நிறையப் பால் கொண்டுவந்தார்.
அணுவளவும் பயமில்லாமல் இருப்பதற்கு, நெவாஸ்கருக்கு எவ்வளவு பக்தியும் விசுவாசமும் இருந்திருக்கவேண்டும்? அவர் நல்ல பாம்பிடம் என்ன சொன்னார் என்பதை சாவதானமாகக் கேளுங்கள்.
 ''பாபா, ஏன் இப்படிக் கோபமாகப் புஸ்ஸென்று சீறுகிறீர்கள்? எங்களை பயமுறுத்தப் பார்க்கிறீர்களா என்னஎடுத்துக்கொள்ளுங்கள்; இந்தக் கிண்ணத்தில் உள்ள பாலை நிம்மதியாக அருந்துங்கள்.
பாம்பிற்கு ஒரு கிண்ணம் பால் போதுமா? ஆகவே நெவாஸ்கர் ஒரு பெரிய பாத்திரம் நிறையப் பாலைக் கொண்டுவந்து பயமின்றிப் பாம்புக்கெதிரில் வைத்தார். உண்மையில் பயம் என்பது மனத்தில் உற்பத்தியாவதுதானே.
பால் நிரம்பிய பாத்திரத்தைப் பாம்புக்கெதிரில் வைத்துவிட்டு, நெவாஸ்கர் அகலாதும் அணுகாதும், பழைய இடத்திற்குப் போய் உட்கார்ந்துகொண்டார். அகமும் முகமும் மலர்ந்து பாம்பைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார்.
பாம்பு நுழைவது பீதியைத்தான் அளிக்கும். ஆயினும், இச் சம்பவத்திற்கு எல்லாருடைய பிரதிபலி­ப்பும் ஒரே மாதிரியாக இருக்குமா என்ன? இந்த ஆபத்தி­ருந்து எவ்வாறு மீள்வது என்று தெரியாமல் திகைத்துப்போய், எல்லாரும் விசாரமடைந்தனர்.
 'நாம் வெளியே சென்றால் பாம்பு வீட்டிற்குள் நுழைந்துவிடும். அங்கிருந்து பாம்பு வெளியே வருவது கடினம்என்று நினைத்து எல்லாரும் அங்கேயே காவலாக உட்கார்ந்திருந்தனர்.
மாட்டுக்கொட்டகையி­ல் இருந்த பாம்பு திருப்தியடைந்தது. யார் கண்ணிலும் படாமல் எங்கோ ஓடி மறைந்தது. யாருக்குமே பாம்பு எங்கே சென்றதென்று தெரியவில்லை. எல்லாரும் ஆச்சரியமடைந்தனர்.
பிறகு அவர்கள் மாட்டுக்கொட்டில் முழுவதும் தேடினர்; பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நெவாஸ்கர் ஒருவரைத் தவிர,  மற்றவரெல்லாரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். நெவாஸ்கருக்கு மட்டும் ஒரு மனக்குறை இருந்தது.
மனக்குறை என்னவென்றால், பாம்பு மாட்டுக்கொட்டி­லில் நுழைவதைப் பார்த்ததைப்போலவே, அது வெளியேச் சென்றதையும் பார்க்க முடியவில்லையே என்பதுதான்.
நெவாஸ்கருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். குழந்தைகள் எல்லாரும் இளம் பிராயத்தினர். குடும்பத்தினர் அனைவரும் அவ்வப்பொழுது நெவாஸாவி­ருந்து சீரடிக்கு தரிசனம் செய்ய வருவர்.
நெவாஸ்கரின் இரண்டு மனைவிகளுக்கும் பாபா புடவைகளும் ரவிக்கைத் துணிகளும் வாங்கிக் கொடுத்து அவர்களை ஆசீர்வாதம் செய்வார். இவ்விதமாக வாழ்ந்த பாலாஜீ நெவாஸ்கர் சிறந்த சாயி பக்தர் ஆவார்.

Popular posts from this blog

தடையை வெல்லும் தாரக மந்திரம்

அன்பான சாயியின் பிள்ளையே! தடைகள்என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிறவிசயம்.எனவே தடை வரும்போது தைரியத்தை இழந்து விடாமல், அடுத்த இலக்கைநோக்கிப் பாய்வதற்குத்தயாராக இருக்கவேண்டும். அதுவும் சாயி பக்தர்கள் என்பவர்கள் சாமான்யமானாவர்கள் கிடையாது. அவர்கள் புண்ணியம் மிகுந்தவர்கள். பாவங்களும், கர்ம கெடுவினையும்தீர்ந்த ஒருவன்தான் சாயி வழிபாட்டை எய்த முடியும் என்று பாபாவே உனக்குச் சொல்லியிருக்கிறார்.இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம், சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறவேண்டியதுதான். மனிதர்கள் போடும் தடைகள் மலைகள் அல்ல,
தாண்டுவதற்குச் சிரமமாக இருக்கும் என்று மலைத்து நிற்பதற்கு. அவையெல்லாம் மடை திறந்த வெள்ளத்தின் முன்னால் கையால் அள்ளிப் போடப்பட்டுள்ள மணல் குவியலைப் போன்றவை. உன்னை அவைதடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை தைரியமாக நினைத்துக் கொள்.. சிந்தனையை ஒருமுகப் படுத்துதைரியத்தை வரவழை.. கோழைகளைப் போலகூப்பாடு போடாமல், செயலாற்றத் தயாராகு. தடை தளர்ந்து போகும்.
பாபா என்ன சொன்னார் தெரியுமா? நீ தண்டால் எடுக்க ஆரம்பி. (கடுமையானப் பயிற்சி) பாலைப்பற்றிய கவலை (பலன் பற்றிய கவலை)உனக்குவேண்டா.…

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்


எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:
1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒரு அழகான துணியினால் மடித்து, பாபா புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும் .
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன், ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் . ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசியாக சிந்தனை என பாபாவினை மனதில் வைக்க முயற்சிக்க வேண்டும் .
3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது போல் , ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும் முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும்.சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி , தசரா , குருபூர்ணிமா , ஜன்மாஷ்டமி , மஹாசிவராத்திரி , நவராத்திரி , முதலியன ஆக…

தடையை வெல்லும் தாரக மந்திரம்

அன்பான சாயியின் பிள்ளையே! தடைகள்என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்குஅழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம்.எனவே தடை வரும்போது தைரியத்தை இழந்துவிடாமல், அடுத்த இலக்கை நோக்கிப் பாய்வதற்குத்தயாராக இருக்கவேண்டும். அதுவும் சாயி பக்தர்கள் என்பவர்கள் சாமான்யமானவர்கள் கிடையாது. அவர்கள் புண்ணியம்மிகுந்தவர்கள். பாவங்களும், கர்ம கெடுவினையும்தீர்ந்த ஒருவன்தான் சாயி வழிபாட்டை எய்த முடியும்என்று பாபாவே உனக்குச் சொல்லியிருக்கிறார். இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம்,சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறவேண்டியதுதான்.