Thursday, June 15, 2017

பாக்யசாலிகள்


அன்புக் குழந்தையே!
நம்பிக்கை, பொறுமை எனும் இரண்டு நாணயங்களை, நீ சேகரித்து வைக்க வேண்டும் என அடிக்கடி சொல்கிறேன். நீ அவசரப்படுகிறாய். என் மீது மட்டுமல்ல, வாழ்வின் மீதும் நம்பிக்கை வேண்டும், எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கை வேண்டும். இப்போது உள்ள நிலையில் எல்லாமே உனக்கு எதிராக போனது போல தோன்றினாலும் அதைப்பற்றி கவலைப்படாதே. இது உலக இயல்பு. எதற்கும் ஒரு முடிவு உண்டு. 
நல்லவர் என்றும் தோற்பதில்லை, நம்பியவர் கைவிடப்படுவதில்லை என சொல்லப்பட்டவை வெறும் வார்த்தை ஜாலங்களுக்காக அல்ல, அனுபவத்தால் வந்த வார்த்தைகள் அவை. அவற்றின் மீது நம்பிக்கை வை. இன்று முதல் நீடித்த பொறுமையை கைகொள். கஷ்டத்தை சகிக்க பழகு. எதையும் எதிர்த்து நில். விதி உன் வாழ்வில் தன் விளையாட்டை உச்ச நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. அது முடிவுக்கு வர இன்னும் சில காலம் நீ காத்திருக்க வேண்டும். 
அதற்குத்தான் பொறுமையை கையாள் என்கிறேன். உன்னை விடுவிப்பது என்பது, நான் என்னை விடுவித்து கொள்வது என்பதாகும். இதை நீ புரிந்துக்கொள். என்னில் ஆழமான நம்பிக்கை கொள்பவர்களும், ஆத்மாவில் சுத்தமானவர்களும் பாக்யசாலிகள்........................ சாயியின் குரல்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...