Wednesday, June 7, 2017

எப்போதும் என் நாமத்தை உச்சரியுங்கள்!




எனது பிள்ளைகளான உங்கள் மீது நிஜமான அன்பு  கொண்டவன் நான். என் பிள்ளைகளை எல்லாவிதக் கஷ்டங்களில் இருந்தும்,  கவலைகளில் இருந்தும் கைதூக்கிவிட அவதரித்தவன் நான். எப்போதும் என் நாமத்தை உச்சரியுங்கள்.   நான் எப்போதும் உங்களை மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.  எப்போதும்  தைரியமாக நீங்கள் இருக்கவேண்டும்.  எதைப் பற்றியும் கவலைப் படாதீர்கள். கால தாமதம் ஆகலாம்.. பொறுமையாக இருங்கள்.  நான் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே நான் நினைப்பேன்.  நான் நினைப்பது மட்டுமே நடக்கும். வழி தெரியாமல் தவிக்காதீர்கள்.. நிச்சயமாக வழியைக் காட்டுவேன் அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும். நீங்கள் என் நினைவாக எப்போதும் இருந்தால் பதற்றப்படவோ, நடப்பதை நினைத்து துக்கப்படவோ மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் என்னுடைய  சங்கத்தில் இருக்கிறீர்கள். உங்கள் சார்பாக நான் செயல்படுகிறேன்.  உங்கள் பிரச்சினை அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். காலம் நேரம் வெகு தொலைவில் இல்லை.   தைரியமாக இருங்கள். இதுவரை எந்தக் கஷ்டம் உங்களைப் பாதித்ததோ, அது தானாக ஓடி ஒளியும்.   மிகவிரைவில் நல்ல நேரம் ஆரம்பிக்கும். என்னை சரணாகதி அடைந்தால் நான் உங்களை பாதுகாப்பேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...