கர்மாவை அழிப்பது எப்படி? அதைக் கூறுகிறேன் கேளுங்கள். வருபவற்றை வரவிடுங்கள். வருந்தாதீர்கள். என்னை
ஸ்மரிப்பவர்களுக்கும் தியானிப்பவர்களுக்கும், பூஜிப்பவர்களுக்கும் அதைத்
தாங்கும் சக்தியை நான் பிரசாதிக்கிறேன். வெளிப்பார்வைக்கு நீங்கள் அதை
அனுபவிப்பதாகத் தோன்றினாலும், மறைமுகமாக அதை நானே அனுபவிக்கிறேன்.
இந்த உடல் சாய் பாபாவினுடையது என்று உறுதியாக நம்புங்கள்.அது போதும். ஒரே
பிறவியில் மீதமுள்ள கர்மா அனைத்தையும் அனுபவிக்கும்படிச் செய்வேன். மிக்க
விஸ்வாசத்துடன் என் நாமத்தை ஸ்மரித்து என்னையே நினைத்துக்கொண்டிருங்கள். காலத்தின்
போக்கு கர்மா பற்றிய சிந்தனையின்றி இருங்கள்.நான் இருக்கிறேன்! நம்புங்கள்.
நீயாக என்னைத் தேடிவரவில்லை
குழந்தாய். எந்த தெய்வத்திடம் உன் கஷ்டங்களை எல்லாம் சொல்லி அழலாம் என்று நீ மருகி மலைத்து நின்ற
போது, நான் இருக்கிறேன் என்று திருவிழாவில்
தொலைந்த குழந்தையைத் தேடும் தாயாய் நான்தான் உன்னைத் தேடி வந்தேன். அந்த அளவிற்கு
நான் உன்னை நேசிக்கிறேன். உன் பூர்வ புண்ணியம் மிகவும் பெரிது குழந்தாய். உன்
மூதாதையர்கள் மற்றும் உன் தாய், தந்தை செய்த புண்ணியங்கள் நிறைய. அதனால்தான் நான் உன்னைத்தேடி வந்தேன். நான்
உன்னுடன் இருக்கையில் நீ எதற்குமே கலங்கக்கூடாது. உனக்கு வேண்டியதை நான் செய்வேன்.
என் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவே நான் அவதரித்து வந்தவன். நீ நான் தேடிக்
கண்டுபிடித்த புதையல். இந்த புதையலை திரும்பவும் மண்ணில் வீசி எறிய விடமாட்டேன்.
இந்த சாயியின் கஜானாவில் உன்னைக் கண்ணின் மணியாகப் பாதுகாப்பேன்.
No comments:
Post a Comment