நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Sunday, June 4, 2017

அனைத்தையும் நான் அறிவேன்!

என் அன்பு குழந்தையே!
ஏன் இத்தனை கேள்வியும் கொதிப்பும்.  உன் மனதில் இருக்கும் அனைத்தையும் நான் அறிவேன்.  அது எப்படி?  நான் பெற்று எடுத்த பிள்ளை,  என் பிள்ளை நீ,  உன்னை விட்டு நான் போவேன் என்று நீ எப்படி நினைக்கலாம்.  உன்னை வலுப்படுத்தவே இங்கு நான் வந்துள்ளேன்.  உன் வாழ்க்கையில் நீ அறிந்தது.  இந்த ஒரு ஜென்மத்தில் தான் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று.  
ஆனால் இதற்கு முன் நீ எடுத்த எல்லா ஜென்மத்திலும் உன்னுடன் தான் நான் இருந்தேன்.  உன் உயிரின் அகண்டமாய் இப்பொழுதும் எப்பொழுதும் உன்னுடன் தான் உன் சாய் அப்பாவான நான் இருப்பேன்.  உனக்கான எல்லாம் நான் தருவேன்.  கொஞ்சம் காலம் பொறுத்துக்கொண்டாய்.  இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்.  
உன்னைப்புறக்கணித்தவர்,  உன்னைத் தேடி வந்து,  நீ காட்டிய அன்பானது தூய்மையானது என்று உணருவர்.  உன் அன்புக்காக அவர்கள் ஏங்கி உன் அருமையை புரிந்துவருவார்கள்.  உன் ரணப்பட்ட மனதிற்கு நிச்சயம் நான் மருந்தாக இருந்து அனைத்தும் உனக்கு சுகம் பெறச் செய்வேன்.  
இப்போது உள்ள உன் மனநிலைமை கஷ்டங்களைப் பார்த்து மரத்துப் போய் கண்ணீர் வற்றி இருக்கிறாய்.  இவை அனைத்தயும் நான் மாற்றி அமைப்பேன்.  நீ என்மேல் கொண்ட பக்தியானது,  உலகை விட பெரிது.  
உன்னை என்பிள்ளை என்று சொல்லும் போது,  உன் சாய் அப்பா மனதில் ஏற்படுகின்ற ஆனந்தமானது வார்த்தைகளால் சொல்லி உணர வைக்க முடியாது.  என் பிள்ளைக்கு,  அவர்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் அடியெடுத்து வைக்கும் காலம் வந்துவிட்டது.  உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. உன்னை விலகும் படி நான் செய்வதும் இல்லை.  
நீ சாயியின் பிள்ளை.  அன்புக்குப் பெயர் கொண்ட பிள்ளை.  உன் மனதில் குதர்க்கமான எண்ணங்கள் எழுந்தால்,  அதை விட்டு விடு.  அதைப் பெரிதாக எடுக்காதே.  மனமும் புத்தியும் நமக்கு பாதி நண்பன், பாதி எதிரி.  அதனால் அவற்றை என் பாதத்தில் வைத்து விடு.  நான் பார்த்துக் கொள்கிறேன்.  
நிறை குறை என எல்லாரிடமும் உண்டு.  அதனால் அதைத் திருத்த நீ முயற்சி செய்.  இப்படி குறையுடன் இருக்கிறோமே என்று வருத்தப்படாதே.  உன் சாய்அப்பா இருக்கிறேன் என் ஆசியும் அருளும்  எப்போழுதும் உனக்கு உண்டு.
 நீ  நன்றாக நலமுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வாய்.  என் கண்ணே!  உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை அரவணைத்துக் காப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்