Thursday, June 8, 2017

பாபாவிடம் ஆத்மார்த்தமாக இணையுங்கள்!


உங்களுடைய கவலைகள் அனைத்தும் தீரும். பாபாவிடம்  ஆத்மார்த்தமாக இணையுங்கள். எப்பொழுதும் பாபா உங்களுடனேயே இருப்பதாக எண்ணி வாருங்கள்.  நீங்கள் நடக்கும்போது,  உங்களுடனே பாபாவும் நடந்து வருகிறார்.  நீங்கள் உறங்கும்போது,  அவர் மடியிலேயே தலையை வைத்து உறங்குகிறீர்கள்.  தொடர்ந்து,  இவ்விதமாகவே எண்ணி வாருங்கள். 
பாபாவே எல்லாவற்றையும் இயக்குகிறார் என திடமாக நம்புங்கள், அப்பொழுது மிகுதியான பலனை அடைவீர்கள். வியாழக்கிழமை மட்டும் பாபாவிற்கு உகந்த நாள் அல்ல. எல்லா நாளும், எல்லா  நேரமும், எல்லா இடமும் பாபாவிற்கு உகந்ததே. பாபா மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா இடமும் துவாரகாமாயியே. 
இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாபாவை வணங்குங்கள். நம்பிக்கையோடு அழைக்கும்போது நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...