பாபாவின் குழந்தையாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாக பாவித்து,  பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்தச் சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால், பாபா அவருடைய எல்லா சுமைகளையும் ஏற்க முன் வந்து, அந்த பக்தரை உண்மையிலேயே தனது குழந்தையாக ஆக்கி கொள்கிறார். அதாவது அவனுடைய பொறுப்புகள் யாவற்றையும் பாபா ஏற்பார்.

பாபாவே கூறியுள்ளபடி,  " ஒருவன் காண்பது என்னை,  என்னை மட்டுமே என்றாலும்,  மேலும் என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பவன் என்றாலும், என்னிடம் மட்டுமே பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி வந்து, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை ".

பாபாவிடம் பக்தி செலுத்துவோர் இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பாபாவிடம் சரணடைந்து அவரது குழந்தையாக வேண்டுபவர்கள் எத்தனை பேர்?  மனித குலத்தில் உள்ள பெருங்குறை இது. சுலபமாக அளிக்கப்படுவதை யாரும் மதிப்பதில்லை.  தமது குழந்தைகளுக்கு அமானுஷ்யமான, அதிசயத்தக்க பாபா அளித்த நூற்றுக்கணக்கான உதவி சம்பவங்களுக்குப் பின்னரும் விசுவாசம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே நீ பாபாவிடம் சரண் புகுந்துவிட்ட குழந்தை எனில், வேண்டியதை அளிக்கத் தயாராக பாபா இருப்பதை நீ உணர்வாய். பாபாவிடம் இந்த கணமே பூரண சரணாகதி அடையுங்கள், மற்ற எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொள்வார்.

            * ஜெய் சாய்ராம் *
Powered by Blogger.