''ஒருவருடைய
குரு எவராக இருந்தாலும்
அவர்மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும். வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது.. மற்ற குருமார்களுடைய கீர்த்தி மிகப்பெரியதாக இருக்கலாம்; நம் குருவுக்கு
அத்தகைய கீர்த்தி ஏதுமில்லாதிருக்கலாம்.
ஆயினும், நம்முடைய முழு விசுவாசமும் நம் குருவின்மேல்தான் இருக்கவேண்டும்.
எத்தனை இதிஹாஸங்களையும் புராணங்களையும் புரட்டினாலும் தத்துவ உபதேசத்தைப் பொறுத்தவரை அவையனைத்தும் ஒன்றே. இவ்வனுபவத்தைப்போல நேரிடையான நிரூபணம் கிடைக்காதவரை, விசுவாசம் எளிதாக ஏற்படுவதில்லை.
எத்தனை இதிஹாஸங்களையும் புராணங்களையும் புரட்டினாலும் தத்துவ உபதேசத்தைப் பொறுத்தவரை அவையனைத்தும் ஒன்றே. இவ்வனுபவத்தைப்போல நேரிடையான நிரூபணம் கிடைக்காதவரை, விசுவாசம் எளிதாக ஏற்படுவதில்லை.
உறுதியான விசுவாசமில்லாமல், 'நான் தன்னையறிந்தவன்’ என்று பீத்துபவர்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தையே
அனுபவிக்கிறார்கள். அவர்கள் இகத்திலும் இல்லை; பரத்திலும் இல்லை. ஒரு கணமும் நிம்மதியோ சாந்தியோ இன்றி, சஞ்சலங்களிலும் கவலைகளிலும் ஜன்மம் முழுவதும் மூழ்கிப்போகின்றனர். இவ்வாறு இருந்தபோதிலும் முக்தியடைந்துகொண் டிருப்பதாகத் தம்பட்டமடிக்கின்றனர்.
ஸாயீ தரிசனம் நம்முடைய பாவங்களையெல்லாம் நிவிர்த்தி செய்து, இவ்வுலக சுகங்களையும் மேலுலக சுகங்களையும் ஸமிருத்தியாக அளிக்கும் சக்தி வாய்ந்தது.
ஸாயீ தரிசனம்
மேலும் மேலும் செய்யச் செய்ய, எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை அளிக்கும்.
No comments:
Post a Comment