Saturday, January 4, 2014

பாபாவின் பரிந்துரை


                     ''ஏற்கெனவே என்ன நடந்ததோ, என்ன நடக்கப்போகிறதோ, அதற்கேற்றவாறு வாழ்க்கை நடத்து. எது பிராப்தமென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதை அறிந்துகொண்டு நட. எப்பொழுதும் திருப்தியுள்ளவனாக இருசஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்பொழுதும் இடம் கொடுக்காதே.
                     கவனி!  வீடு, குடும்பம் போன்ற தளைகளில் மாட்டிக்கொள்ளாமல் தொந்தரவுகளி­ருந்து முழுமையாக விடுபட்டு, வாழ்க்கையின் தொல்லைகளையும் ச­ப்புகளையும் அறவே தியாகம் செய்துவிட்டு ஒரு பக்கீராக நான் அமைதியாக ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கும்போதே, எதற்கும் அடங்காத மாயை என்னை விடாது துன்புறுத்துகிறது. நான் அவளை உதறிவிட்டாலும், அவள் என்னை உதறாது என்னுடன் நிரந்தரமாக ஒட்டிக்கொள்கிறாள். அவள் ஸ்ரீஹரியின் ஆதிமாயை; பிரம்மாதி தேவர்களையே நிலைதடுமாறுமாறு செய்திருக்கிறாள். இந்நிலையில் அவள் முன்னிலையில் இந்த பலவீனமான பக்கீரின் கதி என்னவாக இருக்கமுடியும்?
                      ஸ்ரீ ஹரியே விருப்பப்படும்போதுதான் மாயை ஒழியும். இடைவிடாத ஹரிபஜனையின்றி மாயையி­ருந்து விடுதலை கிடைக்காது.


                   
பாபா, பக்தர்களுக்கு விளக்கம் செய்த மாயையின் மஹிமை இதுவே. மாயையின் பிடியி­ருந்து நிவிர்த்தி பெறுவதற்கு, இறைவனுடைய பெருமைகளைப் பாடும் ஸேவையையே பாபா பரிந்துரை செய்தார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...