Wednesday, January 15, 2014

உண்மைப்பொருளை உணர்ந்து கொள்!

சாயி பக்தர் நானா, அதிதிக்கு உணவளிப்பதை நியதியாகக் கடைப்பிடித்து வந்தார். சில சமயம் காத்திருந்தும் கூட எவரும் கிடைப்பதில்லை என்று சாயியிடம் முறையிட்டார்.

அதற்கு பாபா, “ நானா, சாஸ்திரங்கள் ஒரு போதும் தவறாகாது.  மந்திரங்களும் அப்படியே!  ஆனால் அவற்றின் உண்மையான சாராம்சத்தை நீ அறிந்துகொள்ளவில்லை, நீ பயனற்ற விளக்கங்களை எல்லாம் மண்டையில் ஏற்றிக்கொண்டு விருந்தாளிகளுக்காகக் காத்திருக்கிறாய்.   எனவே அவர்கள் வருவதில்லை.

அதிதி என்றால், பிராமண ஜாதியைச் சேர்ந்த மூன்றரை முழமுள்ள மனிதனை மட்டுமா குறிக்கிறது.  உண்ணும் சமயத்தில் மனிதரோ, பறவையோ, மிருகங்களோ, புழு பூச்சிகளோ எந்தப் பிராணி பசியோடு வருகிறதோ அதுவே அதிதி.  இவை யாவுமே உணவை நாடுகின்றன.

உனக்குக் கிடைக்கும் நிஜமான அதிதியை நீ அதிதியாகக் கருதுவதில்லை.  காக பலி கொடுக்கும் சமயத்தில் சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துப் போய் வீட்டுக்கு வெளியே வை.  எந்தப் பிராணியையும் அழைக்காதே, சாப்பிட வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே.  எந்தப் பிராணி சாப்பிட வந்தாலும் அதைக் குறித்து மனத்தை அலட்டிக்கொள்ளாதே.  இவ்வாறு செய்வதன் மூலம் லட்சக்கணக்கான விருந்தாளிகளுக்கு உணவளித்த பலனைப் பெறுவாய் என்றார் பாபா.



ஆச்சார்யா பரத்வாஜ் சுவாமிகள் தொகுத்த ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள் என்ற புத்தகத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...