யார் தரிசனத்திற்கு வந்து அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினாலும், அவர்
ஹிந்துவானாலும் சரி, முஸ்லீமானாலும்
சரி, பார்ஸியானாலும் சரி, பாபா முதலில் அவரிடம்தட்சணைகேட்பார்.
தட்சணைஎன்ன சொல்பமான தொகையா? ஒன்றா இரண்டா அல்லது ஐந்தா? கிடையவே கிடையாது. நூறோ ஆயிரமோ லக்ஷமோ கோடியோ அவர் விரும்பிய தொகையைக் கேட்பார்.
தட்சணைஎன்ன சொல்பமான தொகையா? ஒன்றா இரண்டா அல்லது ஐந்தா? கிடையவே கிடையாது. நூறோ ஆயிரமோ லக்ஷமோ கோடியோ அவர் விரும்பிய தொகையைக் கேட்பார்.
தக்ஷிணை கொடுக்கும்போது, 'மேலும் கொண்டுவா’ என்று கேட்பார்.
கையில் பணம் தீர்ந்துவிட்டது
என்று சொன்னால், 'கடன் வாங்கிக்கொண்டுவா’ என்று சொல்வார். யாரிடமும் மேற்கொண்டு கடன் வாங்கமுடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகுதான்தட்சணைகேட்பதை நிறுத்துவார்.
அந்நிலையில்
பக்தரிடம் சொல்வார், ''சிறிதும்
கவலைப்படாதீர். நான்
உமக்கு. இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும்
யாரோ இருக்கிறார்; யாராவது
ஒருவர் இருக்கிறார். ஆனால் எனக்கோ இங்கு யாருமே இல்லை; அல்லா, அல்லா
மட்டும்தான் இருக்கிறார்.
என்னைத் தம்முடைய ஜீவப்பிராணனைவிட
அதிகமாக எவர் நேசிக்கிறாரோ அவரே எனக்கு வேண்டும். அப்பேர்ப்பட்டவருக்கு, அவர் ஒரு குணம் (மடங்கு) கொடுத்தால் நான் நூறு குணம் (மடங்கு) திருப்பியளிப்பேன்.”
கோடீச்வரராக இருக்கலாம், அவரும் எங்காவது ஏழை எளியவர்களிடம் தக்ஷிணைக்காகக் கடன்
வாங்கிக்கொண்டு வரும்படி
ஆணையிடப்பட்டார். செல்வரோ, ஆண்டியோ, ஏழையோ, பலமில்லாதவரோ, பணமில்லாதவரோ
- ஸாயீ அவர்களுக்குள்ளே
ஒருவர் முக்கியமானவர், மற்றவர் முக்கியம் அல்லர் என்று பேதம் பார்த்ததில்லை.
இவ்வாறு, யாராக இருந்தாலும் சரி, தம்முடைய கௌவரத்தையெல்லாம் இறக்கி வைத்துவிட்டு பாபாவின் ஆக்ஞையை சிரமேற்கொண்டு, ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று பாபாவுக்குதட்சணைகொடுப்பதற்காகப் பிச்சை எடுத்தனர். சுருங்கச் சொன்னால்,தட்சணைகேட்டு வாங்கும் சாக்கில் பாபா அவர்களுக்குப் பணிவை போதனை செய்தார்.

No comments:
Post a Comment