Friday, January 17, 2014

ஸாயீயின் பொன்னடிகள்.


மஹாயோகிகளால் கண்வீச்சாலேயே நாஸ்திகர்களையும் பாவத்தி­லிருந்து விடுதலை செய்யமுடியுமென்றால், ஆஸ்திகர்களுடைய நிலை என்ன? அவர்களுடைய பாவம் மிக சுலபமாக அழிக்கப்படுகிறதன்றோ?

      பிரம்ம ஸாக்ஷாத்காரம் பெற்று பிரம்மத்திலேயே லயித்த மனமுடைய மஹாத்மா, தம்முடைய கண்ணோக்காலேயே கடக்கமுடியாத கொடிய பாவங்களையும் அழித்துவிடுகிறார்.

     பாபாவுக்கு உங்கள்மீது அன்பு இருக்கிறது. ஆகவே, பண்டிதராயினும் சரி, பாமரராயினும் சரி, நீங்களனைவரும் நிர்மலமான இதயத்துடன் இருங்கள்.

 எங்கே பக்தியும் பிரேமையும் இருக்கிறதோ, எங்கே பாபாவின்மீது பிரியமான ஈர்ப்பு இருக்கிறதோ, அங்கேதான் உண்மையான தாகம் உருவெடுக்கிறது.


      அனன்னியமாக சரணமடைந்தவர்களுக்கு வஜ்ஜிரம் போன்ற அடைக்கலமும் அளவற்ற சக்தியை உடையதுமான ஸாயீயின் திருவடிகளில் ஹேமாட் நமஸ்காரம் செய்கின்றேன். இவ்வுலக வாழ்க்கையின் பயங்களை அறவே ஒழிக்கும் சக்தியுடையவை ஸாயீயின் பொன்னடிகள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...