Thursday, January 16, 2014

அடியார் சொல்லும் பலிக்கும்.

பாபாவினால் ஆன்மீகத்துறையில் வழிகாட்டப்பட்ட பல முஸ்லீம்கள் பற்றி இமாம் பாய் இவ்வாறு கூறுகிறார்.

பாபா எனக்குத் தெரிந்த இரண்டு முஸ்லீம்களுக்கு ஆன்மீக உயர்வு அளித்துள்ளார்.  எனது கிராமத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் சீரடிக்கு வந்தார்.  பாபா அவரிடம், நான் இன்று இறந்து போனால் நாளை மறுநாள் மூன்றாவது நாளாகிவிடும்.  வீடு, நிலம், மற்ற சொத்துக்களால் நமக்கு என்ன பிரயோசனம்? என்று வைராக்கியம் தரும் மொழிகளைப் பேசினார்.

ஷேக் அப்துல்லா எங்கள் கிராமத்திற்க்குத் திரும்பினார்.  அவருக்கு ஒரு மனைவியும் சிறு குழந்தைகளும் இருந்தனர்.  தனது வீட்டையும் சொத்துக்களையும் அவர்களிடம் விட்டுவிட்டு தெருக்களில் திரிந்தார்.  இரவுகளை ஏதேனும் கல்லரைகளுக்கு அருகில் தமக்குத்தாமே முணுமுணுத்தவாறு கழிப்பார்.

மற்றவர்களாக எதைக் கொடுக்கிறார்களோ அதைக் கொண்டே ஜீவித்தார். சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்படவில்லை.  இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் அற்புதமான சக்திகள் அவரிடம் வளர்ந்துள்ளன.

அவர் ஒருமுறை என்னைப் பிரயாணம் செய்ய வேண்டாம் என்றும், ஒரு குறிப்பிட்ட இடத்தைக்கூறி, அங்கே பாம்பு இருக்கும் என்றும் கூறினார்.
அது ஒரு பகல் வேளையானதால் நான் அவரது எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை.  ஆனால், அவர் குறிப்பிட்ட அதே இடத்தில் ஒரு பாம்பைப் பார்த்தேன்.

எனது ஊரைச் சேர்ந்த அப்பாஸ் சையத் என்ற பீடி வியாபாரி, ஒரு முறை அப்துல்லாவிடம் , “நீ ஏன் மனைவி குழந்தைகளை எல்லாம் விட்டுவிட்டு பைத்தியம் மாதிரி நடந்து கொள்கிறாய்?என்று கேட்டார்.

அப்துல்லா, “உனக்குப் புரியும் காலம் வரும்என்றார்.  அப்பாஸ் சையத், ‘இது பைத்தியம் என்று தனக்குத் தெரியும்என்றார்.  அப்போது அப்துல்லா எதையோ அப்பாஸ் சையத்தின் மேல் வீசி எறிவதைப் போல் பாவனை செய்து, மூடிய கையை உதறி, “நீயும் அப்படியே ஆவாய்என்றார்.

அன்று முதல் அப்பாஸ் சையத்தும் தமது வியாபாரம், வீடு, உறவினர்கள் யாவரையும் விட்டுவிட்டு, இன்னமும் திரிந்துக் கொண்டிருக்கிறார்.

ஆச்சார்யா பரத்வாஜ் சுவாமிகள் தொகுத்த ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள் என்ற புத்தகத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...