என் பெயர்
கீதா. சென்னை சந்தோஷபுரத்தில்
வசிக்கிறேன். என் மகன் திருமணம் செய்து
கொள்ள சம்மதம் தெரிவிக்காமல் மறுத்துவந்தான்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக போகாத கோயில்களே இல்லை, வேண்டாத தெய்வமும் இல்லை, நாடாத ஜோதிடர் இல்லை,
செய்யாத பரிகாரங்கள் இல்லை எனலாம்.
இருப்பினும் மகனின் சம்மதம் மட்டும் கிடைக்கவில்லை.
எல்லாவற்றையும்
விட்டு விட்டு சாயிவரதராஜனுடன் சீரடி சென்று வந்தேன். அவரது சாயி தரிசனம் புத்தகத்தை படித்த்தினால்
எழுந்த உந்துதலினால் 04-07-2013 அன்று புதுப் பெருங்களத்தூர் சீரடி சாயி
பிரார்த்தனை மையம் சென்று, மகனுக்கு திருமணம் செய்து வைப்பது பாபாவின் பொறுப்பு
என்று மனம் உருகி வேண்டி சீட்டு எழுதி பாபாவின் பாதத்தில் வைத்து வழிபட்டு
வந்தேன்.
நான்
முற்றிலும் எதிர்பார்க்காத அதிசயம் நிகழ்ந்தது. 07-07-2013 அன்றே எனது மகன்
திருமணத்திற்க்கு சம்மதித்து, பெண் பார்த்து உடன் 15-07-2013 அன்று நிச்சயமும்
பாபாவின் திருவருளால் நிகழ்ந்தேறிய அற்புத்த்தைக் கண்டேன்.
இதைத்
தொடர்ந்து 07-11-2013 வியாழக்கிழமை அன்று என் மகன் திருமணம் நடைபெற்றது. என் மகன்,
மருமகளுடன் பிரார்த்தனை மையம் வந்து பாபாவிற்க்கு நன்றி தெரிவித்து காணிக்கை
செலுத்திவிட்டு வந்தோம்.
இந்த
அற்புத்தினை சாயி தரிசன வாசகர்களுக்குத் தெரிவிக்கவும், பெருங்களத்தூர்
பாபாவிற்க்கு நன்றி சொல்லவும் நான் கடமைப்பட்டு உள்ளேன்.
திருமதி
கீதா
சந்தோஷபுரம்
சாயிதரிசனம்
இதழிலிருந்து
No comments:
Post a Comment