திக்கெட்டும் சாயி கோயில், திசையெங்கும் சாயி முழக்கம் என்பதை வலியுறுத்தி சாயி கோயில்களை
உருவாக்கி, நற்பணிகளைச் செய்திட உருவாக்கப்பட்ட சீரடி சாயி சமதர்ம சமாஜ;
அறக்கட்டளையின் புதிய சீரடி சாயி பாபா ஆலயத்திற்கான
ஆரம்ப வேலைகள், வண்டலூர் -
ரத்தின மங்கலம் - கண்டிகை வழியில் உள்ள அம்மனம் பாக்கம் மலையடிவாரத்தில் 29-12-2013 ஞாயிற்றிக்கிழமை
அன்று பூமி பூஜை நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் துனி, பிரார்த்தனைக்
கூடம், தியானக் கூடம், அன்னதானக் கூடம் உட்பட பல அம்சங்கள் இடம்
பெறுகின்றன. சீரடியிலிருந்து கொண்டு வரப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிற குருஸ்தானத்தின்
வேப்பமரக் கன்று இந்த இடத்தில் ஸ்தாபிதம் செய்யப்படவுள்ளது.
மாணவர்களுக்கு மட்டும் அருள் பாலிப்பதற்காக மாணவ கணபதியாக
எழுந்தருளவிருப்பதாக வாக்களித்த பாபாவுக்குத் தனி சந்நிதி ”மாணவ
ஞான கணபதி ஆலயமாக”
இந்த வளாகத்தில் உருவாக்கப் படுகிறது.
எந்தப் புண்ணியவானின் கைங்கர்யத்தால் இந்த ஆலயம் அமைப்பதற்கான முதல்
கம்பிகள், செங்கற்கள், மணல் மற்றும் சிமெண்ட் போன்றவை வாங்கப்படுகிறதோ
அவர்களுக்கு மிகுந்த பலனை பாபா கொடுப்பார் என்று கோபர்கான் சுவாமிகள் பூஜ்ய ஸ்ரீ சாய் சக்தி சுப்ரமண்யம் அனந்த தீர்த்த மகராஜ் ஆசி வழங்கியிருக்கிறார்.
சாயி பக்தர்களாகிய உங்களுடைய உதவியால் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம்
இன்று உலகப்புகழ் பெற்று உருவாகியுள்ளது. இதே போல புதிதாக அமையவுள்ள இந்த இடமும்
மிகப்பெரிய சக்தி வாய்ந்த அற்புதத் தலமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாபா உங்கள் மனதில், இந்தக்
கோயில் உருவாக்கப் பணியில் உதவி செய்யுங்கள் என்று ஏவினால், நீங்கள் பொருட்களாக வாங்கித் தரலாம், அல்லது நன்கொடைகளாக அளிக்கலாம்.
மேலதிக விபரங்கட்கு பெருங்களத்தூர் சீரடி சாயி சமதர்ம சமாஜ் மையத்தினை
அணுகவும்..
சாயி வரதராஜன்
No comments:
Post a Comment