சாயி
பக்தரான மகால்சாபதி வறுமையில் வாடியவர். எல்லோருக்கும் அள்ளிக்கொடுத்த பாபா, மகால்
சாபதிக்கு எந்த உதவியும் தரவில்லை.
மகால்சாபதியும் பாபாவிடம் கை நீட்டி தனக்கு உதவ வேண்டும் எனக் கேட்டது
இல்லை. சொற்ப வருமானத்திலேயே
திருப்தியுடன் கஷ்டங்களை எதிர்கொண்டு வந்தார்.
ஒரு முறை
அம்சராஜ் என்ற வியாபாரி, மகால்சாபதிக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினார். பாபாவின் தர்பார் நடந்துகொண்டிருந்த போதே,
அனைவரும் அறிய சிறிது பணத்தை எடுத்து மகல்சாபதியின் கைகளில் திணித்தார்.
பாபாவின்
அனுமதியின்றி இந்தப் பணத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறி, மகல்சாபதி பணிவுடன்
பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.
உடனே
அம்சராஜ், பாபாவிடம் அனுமதி வேண்டி கெஞ்சினார்.
ஆனால் மகால்சாபதியை ஒரு பைசாவைக்கூட தொட அனுமதிக்காத சாயி பாபா சொன்னார்:
“என்னுடைய
பக்தர் திரவியத்தைத் தேடமாட்டார், அவர் ஒரு போதும் செல்வத்தின் வைபவத்தில்
மாட்டிக்கொள்ளமாட்டார்”.
ஆச்சார்யா
பரத்வாஜ் சுவாமிகள் தொகுத்த ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள் என்ற
புத்தகத்திலிருந்து
No comments:
Post a Comment