Tuesday, January 7, 2014

சாதுவிற்க்கு ஏன் தட்சணை?

ஒரு சாதுவுக்குப் பணம் எதற்காக வேண்டும் என்று எவருக்கும் சந்தேகம் எழலாம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், மிக எளிதாக இந்த சந்தேகம் நிவிர்த்தியாகும்.
ஸாயீ பூர்ணகாமர் (எல்லா ஆசைகளும் முழுமையாக நிறைவேறியவர்) என்றால் அவர்தட்சணைஎதற்காகக் கேட்கவேண்டும்? பக்தர்களைப் பணம் கேட்பவரை, விருப்பமேதும் இல்லாதவர் என்று எவ்வாறு சொல்லமுடியும்?
எவருக்கு வைரமும் சிக்கிமுக்கிக்கல்லும் ஒன்றோ, எவருக்குத் தாமிரக் காசும் தங்கமொஹராவும் ஒன்றோ, அவர் எதற்காகப் பணத்துக்காகக் கை நீட்டுகிறார்?
வயிற்றுப்பிழைப்புக்காகப் பிச்சை எடுப்பவர், ஏழ்மையையும் பற்றற்ற வாழ்வையும் விரதமாகக் கொண்டவர், ஆசைகள் ஏதுமின்றி வைராக்கியத்துடன் வாழ்பவர் எதற்காகதட்சணைஎதிர்பார்க்கிறார்?
எவருடைய வாச­ல் அஷ்டஸித்திகளும் காத்துக்கொண் டிருக்கின்றனவோ, எவருடைய ஆணையை நவநிதிகளும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனவோ அவருக்குப் பணம் தேவைப்படும் இழிநிலை ஏன்?
இவ்வுலக இன்பங்களைத் 'தூவென்று உதறியவர்களுக்கு, பரவுலக வாழ்வையும் வெறுத்து லட்சியம் செய்யாதவர்களுக்கு, எங்கு நன்மை இருக்கிறது என்பதை நன்கறிந்த பற்றற்ற சாதுக்களுக்குப் பணம் எதற்காகத் தேவைப்படுகிறது?
பக்தர்களின் க்ஷேமத்திற்கும் மங்களத்திற்காகவுமே வாழும் ஞானிகளுக்கும் சாதுக்களுக்கும் சான்றோர்களுக்கும் செல்வம் எதற்காக?      சாதுக்கள் எதற்காக தட்சணை கேட்கிறார்கள்? அவர்களுடைய மனம் ஆசையற்று இருக்கவேண்டும். பக்கீராக ஆகியும் பணத்தாசை விடாமல் பைஸாவை ஏன் நித்திய ஆராதனை செய்கிறார்கள்?
 முதல் தரிசனத்தின்போது தட்சணை ஏற்றுக்கொள்கிறார்; இரண்டாவது தரிசனத்தின்போது மறுபடியும் தட்சணை கேட்கிறார்; விடை பெற்றுக்கொள்ளும்போது ''தக்ஷிணை கொண்டுவாரும் என்று இன்னுமொருமுறை கேட்கிறார். ஒவ்வொரு நிமிடமும் எதற்காக தக்ஷிணை?      சடங்குகளுடன் ஆசாரமாகச் செய்யும் பூஜையில் ஆசமனம் செய்வதற்கு நீர் அளிக்கப்படுகிறது. நைவேத்தியம் (படையல்) ஆனவுடன் கைகளையும் வாயையும் அலம்பிக்கொள்வதற்கு நீர் அளிக்கப்படுகிறது. பிறகு கைக்கு வாஸனைத்திரவியம் பூசியபின் தாம்பூலம் அளிக்கப்படுகிறது. இதெல்லாம் நடந்து முடிந்தபிறகு, கடைசியாகத்தான் தட்சணை அளிக்கப்படுகிறது.
ஆனால், பாபாவின் கிரமமே வேறு. சந்தனம் பூசப்பட்டுக்கொண் டிருக்கும்போதே, அக்ஷதை அலங்காரம் செய்யப்படும்போதே, தட்சணை உடனே கொடுக்கப்பட வேண்டுமென்று  எதிர்பார்ப்பார்.
 'ஓம் தத் ஸத் பிரம்மார்ப்பண மஸ்த என்று ஓதி, பூஜையின் முடிவில் கொடுக்க வேண்டிய தக்ஷிணையை 'சுக்லாம்பரதரம் குட்டும் போதே பாபா கேட்பார்; அதை உடனே கொடுத்துவிட வேண்டும். இருப்பினும் இந்த ஸந்தேஹத்தை பெருமுயற்சி ஏதும் எடுக்காமலேயே நிவிர்த்தி செய்துகொள்ளலாம். கொஞ்சம் கவனமாகக் கேட்பின் நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள்.

செல்வம் சேமிப்பதின் நோக்கமே தருமகாரியங்களில் செலவிடவேண்டும் என்பதுதான். அதற்குப் பதிலாக, அல்பமான புலனின்ப நுகர்ச்சியிலேயே அது செலவாகிவிடுகிறது.     செல்வம் தருமத்தை வளர்க்க வேண்டும்; தருமத்தி­ருந்து இறைஞானம் தோன்றும். செல்வம் இவ்விதமாக நம்மை ஆன்மீகப் பாதையில் அழைத்துச்சென்று மனத்திற்கு மகிழ்ச்சியையும் சாந்தியையும் அளிக்கிறது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...