Saturday, January 18, 2014

பாபாவின் திருவாய்மொழி



பாபாவின் வெளிப்படும் பேச்சு சூத்திரங்களைப் போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பீரமானது; வெகு விஸ்தீரணமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது;  பாபாவினுடைய திருவாய்மொழி இத்தகையதே; அர்த்தத்திலும் தத்துவத்திலும் மிகவும் ஆழமானது; சமச்சீரானது; விலைமதிப்பற்றது; காலத்தின் எல்லைவரை அர்த்தமுள்ளது; வீண் போகாதது.

       ''ஞானிகள் என்னுடைய உயிருள்ள உருவங்கள் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பாகவதத்தில் கூறியிருக்கிறார். ஸ்ரீஹரியால் உத்தவருக்குத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட இவ்வார்த்தைகளை அறியாதார் யார்?

       தம் பக்தர்களுடைய நல்வாழ்வுக்காக தயாஸாகரமான ஸாயீ திருவாய் மலர்ந்தருளிய ஸத்தியமான வார்த்தைகளை மிகுந்த விநயத்துடன் கேளுங்கள்.


     தயாளமுள்ள துணைவரும் சரணாகதியடைந்தவர்களைப் பாதுகாப்பவரும் பக்தர்களோடு பிணைந்தவருமான ஸாயீயால் எப்படிப்பட்ட அற்புதம் விளைவிக்கப்பட்டது என்று சற்று பாருங்கள். செய்வன திருந்தச் செய்தவர்களாகி நன்மையடைவீர்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...