தைத்திரியோபநிஷதத்தின் பதினொன்றாவது அனுவாகம் (செய்யுள் தொகுப்பு) தானத்தைப் பற்றிய பல ஆணைகளை இடுகிறது. ஒவ்வொன்றையும் கவனமாகக் கேளுங்கள்.
''முதலாவதாக, தானம் சிரத்தையுடன் கொடுக்கப்பட வேண்டும். அசிரத்தையுடன் கொடுக்கப்படும் தானத்திற்குப் பலனேதும் இல்லை. அரசனுடைய ஆணைக்கோ அல்லது சாஸ்திர விதிகளுக்கோ பயந்துகொண்டு கொடுக்கவேண்டும். வெட்கத்திற்குப் பயந்து சிறிதாவது கொடுக்கவேண்டும்.”
திருமணம் போன்ற சுபமான நிகழ்ச்சிகளின்போது, நட்பின் தாக்ஷிண்ணியத்தை நிறைவேற்றுவதற்காவது ஏதாவது ஒரு பரிசு அளிக்கப்பட வேண்டும். உலக விவகாரங்களின் படிப்பினை இதுவே. பாபாவும் தம் பக்தர்களிடம் அவர்களுடைய நன்மைக்காக 'த’ என்னும் எழுத்தால் (உபநிஷதத்தில்) குறிப்பிடப்பட்டதையே கேட்டார். ''புலனடக்கத்துடன் வாழுங்கள்; தயை காட்டுங்கள்; தானம் செய்யுங்கள்; உங்களுக்கு அமோகமான மகிழ்ச்சி விளையும்.”

குருராயர்
இந்த ஓரெழுத்து மந்திரத்தைத்
தம் சிஷ்யர்கள் மூன்று தோஷங்களிருந்தும் விடுபடவேண்டும் என்பதற்காகவே உபயோகித்தார்.
காமம், கோபம், பேராசை
ஆகிய தோஷங்களை வெல்வது
கடினம். இம்மூன்றும், தன்னையே
உயர்த்திக்கொள்ளும் பாதைக்கு
ஒவ்வாதன. ஆகவே, இந்த சுலபமான வழி பரிந்துரைக்கப்பட்டது.
வேதங்களில் சொல்லப்பட்டவாறே ஸ்மிருதிகளிலும் (வாழ்க்கை நெறி நூல்களிலும்) சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும், கேட்பவர்கள் திடமாகப் பிரீதிடைவதற்காக அதை நான் இங்கே தருகிறேன்.
காமம், கோபம், பேராசை இம்மூன்றும் ஆத்மநாசத்தை உண்டுபண்ணும் நரகத்தின் வாயில்கள் என அறிந்துகொள். ஆகவே, இம்மூன்றையும் முற்றும் துறந்துவிடு.
பரம
தயாளரான ஸமர்த்த ஸாயீ, தம்முடைய
பக்தர்களின் நலனுக்காகவேதட்சணைகேட்டு வாங்கினார். அவர்களுக்குத் தியாகம் செய்யவேண்டுமென்ற படிப்பினையைச் சொல்க்கொடுத்தார்.
தக்ஷிணையால்
அவருக்கு என்ன பெரிய
பிரயோஜனம்? குருவினுடைய
ஆணைக்குக் கட்டுப்பட்டு
உயிரையும் கொடுக்கத்
தயாராக இல்லாதவனுடைய ஆன்மீக வாழ்வு எப்படி உயர்வானதாகும்?
வாஸ்தவமாக, பக்தர்களின் ஆன்மீக முன்னேற்றத்தைத் தவிர, பாபாவுக்கு தக்ஷிணையால் என்ன உபயோகம்? அவர் உயிர்
வாழ்வதற்கு தக்ஷிணையையா நம்பியிருந்தார்õ
பசியாறுவதற்கு அவர் பிச்சையெடுத்தார். ஆகவே, தட்சணை வாங்குவதில் சுயலாப நோக்கம் ஏதும் இருந்திருக்க முடியாது.தட்சணை கொடுப்பதால் பக்தர்கள் மனத்தூய்மை பெறவேண்டும் என்பதே அவருடைய ஒரே லட்சியமாக இருந்தது.
மேலே சொல்லப்பட்ட வேதவசனத்தின்படி, தட்சணை கொடுக்கப்படாமல் குருபூஜை முடிவு
பெறாது.
No comments:
Post a Comment