Tuesday, January 7, 2014

சாயி அனுபவங்கள்!


          சாயி தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவலுடன் ஒரு டாக்டர் நண்பருடன் சிர்டீக்குக் கிளம்பிய மாம்லத்தாருடைய அனுபவமும் இதுபோன்றே அற்புதமானது.

     அந்த டாக்டர் ஒரு பிராமணர்; ஸ்ரீராமரை உபாஸனை செய்தவர். நியமநிஷ்டையுடன் ஸ்நானம், ஸந்தியாவந்தனம், விரதங்கள் போன்ற சடங்குகளை எல்லாம் சாஸ்திர விதிகளின்படி நெறி தவறாது செய்தவர்.
 
சாயி பாபா ஒரு முஸ்லீம்; டாக்டருக்கு இஷ்டதேவதையோ ஜானகிராமன். ஆகவே அவர், தாம் சாயிபாபாவை வணங்கமாட்டார் என்பதைத் தம் நண்பருக்கு முத­லேயே எச்சரித்துவிட்டார்.

                 ''
நான் ஒரு முஸ்லீமின் பாதங்களை வணங்க முடியாது; ஆகவே, ஆரம்பத்தி­ருந்தே எனக்கு சிர்டீ செல்வதில் விருப்பம் இல்லை (என்று டாக்டர் சொன்னார்).

              ''
உம்மை அங்கு யாரும் அவருடைய பாதங்களைத் தொடச் சொல்­லி வற்புறுத்தமாட்டார்கள். இம்மாதிரியான சிந்தனைகளை உதறிவிட்டு சிர்டீக்குப் போவதற்கு முடிவெடுங்கள்.

     ''எனக்கு நமஸ்காரம் செய், என்று பாபா நிச்சயமாகச் சொல்லமாட்டார். மாம்லத்தார் இவ்விதமாக உறுதிமொழி அளித்தபின், டாக்டர் சிர்டீ செல்வதற்குச் சம்மதம் தெரிவித்தார்.

     தம் நண்பரின் உறுதிமொழிக்குக் கட்டுப்பட்டு, சந்தேகங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாபாவை தரிசனம் செய்வதற்குச் செல்வதென்று டாக்டர் முடிவெடுத்தார்.    அதிசயத்திலும் அதிசயம் சிர்டீயை அடைந்து மசூதிக்குச் சென்றவுடனே முதன்முத­ல் டாக்டர்தான் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். நண்பரோ பெருவியப்படைந்தார்.

      மாம்லத்தார் டாக்டரைக் கேட்டார், ''உம்முடைய திடமான தீர்மானத்தை எப்படி மறந்தீர்? ஒரு முஸ்லீமின் பாதங்களில் எவ்வாறு பணிந்தீர்? அதுவும் என் முன்னிலையிலேயே?

       அப்பொழுது டாக்டர் தம்முடைய அற்புதமான அனுபவத்தை விவரித்தார், ''நான் கண்டது நீலமேக சியாமள ரூபனான ஸ்ரீராமனின் உருவத்தையே!  அக்கணமே நான், நிர்மலமானவரும் சுந்தரமானவரும் கோமளரூபமுடையவருமான ஸ்ரீராமரை வணங்கினேன். பாருங்கள், ஸ்ரீராமர் இந்த ஆசனத்தில் உட்கார்ந்துகொண் டிருக்கிறார். அவர்தான் எல்லாரிடமும் பேசிக்கொண் டிருக்கிறார். டாக்டர் இந்த வார்த்தைகளைச் சொல்லி­க்கொண்டிருந்தபோதே, ஒரு கணத்தில், ஸ்ரீராமருக்குப் பதிலாக சாயியின் உருவத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.

       இதைப் பார்த்த டாக்டர் வியப்பிலாழ்ந்து போனார்.  ''இதை எப்படி நான் கனவென்று சொல்லமுடியும்? இவர் எப்படி ஒரு முஸ்லீமாக இருக்க முடியும்? இல்லவேயில்லை? இவர் மஹா யோகீச்வரரான அவதார புருஷர். இந்த சாயி பிரத்யக்ஷமான கற்பக விருக்ஷமாகும்; நாம் விரும்பியதைத் தரும் தேவலோக மரம்.  இந்தக் கணத்தில் அவர் சாயியாக இருக்கிறார்; அடுத்த கணமே அவர் ஸ்ரீராமராக மாறிவிடுகிறார். என்னுடைய அஹந்தையாகிய பிரமையை ஒழித்து என்னை தண்ட நமஸ்காரம் செய்யவைத்துவிட்டார்.

      அடுத்த நாளே அவர், பாபா தமக்கு அருள் புரியவில்லையெனில் மசூதிக்குள் நுழைவதில்லை என்ற விரதம் எடுத்துக்கொண்டார்; சிர்டீயில் உண்ணாவிரதம்  மூன்று நாள்கள் கழிந்தன; நான்காவது நாள் பொழுது விடிந்தது; என்ன நடந்தது என்பதை கவனமாகக் கேளுங்கள்.

      கான்தேச் என்னுமிடத்தில் குடியேறிவிட்ட அவருடைய நண்பரொருவர் தற்செயலாக சாயி தரிசனத்துக்காக சிர்டீக்கு வந்தார்.
ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்த டாக்டரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனே டாக்டரும் நண்பருடன் மசூதிக்குச் சென்றார்.

       போனவுடனே டாக்டர் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். பாபா கேட்டார், ''ஆக, டாக்டரே!  உம்மைக் கூப்பிட யாராவது வந்தார்களா? முத­ல் எனக்குச் சொல்லும்; ஏன் வந்தீர் இங்கு?

       பாணம் போன்ற இந்தக் கேள்வியைக் கேட்டு டாக்டர் உணர்ச்சிவசப்பட்டார். அவருடைய ஸங்கல்பம் ஞாபகத்திற்கு வந்து, குற்றவுணர்ச்சியால் சோகமடைந்தார்.


       ஆனால், அன்றே நள்ளிரவில் பாபாவினுடைய அருள் அவர்மீது பொழிந்தது. தூக்கத்திலேயே பரமானந்தமான நிலையின் மதுரத்தை அனுபவித்தார்.

      பிறகு, டாக்டர் தம்முடைய சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றாராயினும், அடுத்த பதினைந்து நாள்களுக்கு பரிபூரணமான ஆத்மானந்தத்தை அனுபவித்தார். சாயியின்மீது அவருடைய பக்தி வளர்ந்தது.  ஒன்றைவிட இன்னொன்று அதிக அற்புதமானதாக இம்மாதிரியான சாயி அனுபவங்கள் எத்தனை எத்தனையோ! 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...