Wednesday, January 15, 2014

சீடன் - சித்தன்

சைவம் - அசைவம்
சீடன்: 
அசைவம் உண்பது பாபமா?
சித்தன்:
     உலகின் முக்கால் பகுதி மக்கள் அசைவம் உண்கிறார்கள்.  மற்ற நாடுகளிலும் ஆன்மீக குருமார்கள் தோன்றி தனி மதத்தை நிறுவி வழிகாட்டி இருக்கிறார்கள்.  மாபெரும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் இங்குதான் தோன்றின.  ஆகவே, ,அனாவசியமாக மனதைக் குழப்பி கொள்ளாமல், உனக்கு எதைப் பிடிக்கிறதோ, உன்னால் எதை ஜீரணிக்க முடிகிறதோ அதைச் சாப்பிடு.  பாபா சொன்னது போல் அளவாகச் சாப்பிடு.
     சர்க்கரைப் பொங்கல் சைவம்தான்.  அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் புத்தி மந்தமாகும்.  எவையெல்லாம் வயிற்றில் அளவுக்கு அதிகமாகப் போகிறதோ அவை, மூளையை வேலை செய்யவிடாமல் தூங்க வைக்கும்.

     காச நோய் வந்தவர்களை முட்டையும், நோஞ்சான்களை கோழி சூப்பும் சாப்பிடச்சொல்கிற்து மருத்துவம்.  இது அவரவர் மனப்பாங்கினைப் பொறுத்தது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...