Monday, January 13, 2014

பாபாவின் அன்பான வார்த்தைகள்




''யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டுவிட்டனவோ அந்தப் புண்ணியசாலி­களே  என்னை அறிந்துகொள்கிறார்கள்;  என்னை வழிபடுகிறார்கள்.  'ஸாயீ, ஸாயீ' என்று எந்நேரமும் ஜபம் செய்துகொண்டிருப்பீர்களானால், நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும் அளிப்பேன் (ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன்). எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள். எனக்கு அஷ்டோபசார  பூஜையோ ஷோடசோபசார  பூஜையோ வேண்டா. எங்கு பாவம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன்.

      பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். இப்பொழுது நாம் அவ்வன்பான வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொள்வதில்தான் மனத்தைத் திருப்தி செய்துகொள்ள வேண்டும்.


ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...