மனிதன் வாஸ்தவமாகவே சுதந்திரமுள்ளவனாக இருந்தால், இரவு பகலாக சுகத்திற்காக உழைப்பவன் ஏன் கஷ்டத்தை மட்டுமே அடைகிறான்? அவனுடைய விதி அவ்வளவு வலிமையானது. இங்கும், அங்கும், எங்குமே துக்கத்தைத் தவிர்ப்பதில் சாமர்த்தியம் மிகக் காட்டினாலும், விதி அவனை விடுவதாக இல்லை.
அதை
உதறித்தள்ள முயன்றால், அது
கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது; விலக்கிவிட
முயன்றால், மேலும் அழுத்தமாகத் தழுவுகிறது. இரவுபகலாக மனிதன் நடத்தும் போராட்டமெல்லாம் வீணாகிப்போகிறது.
மனிதன்
நிஜமான சுதந்திரம் பெற்றிருந்தால், சுகத்தைத் தவிர வேறெதையும் நாடமாட்டான்; சிறிதளவும் சந்தேகமிருந்தால் துக்கத்தின் அருகிலேயே செல்லமாட்டான் அல்லனோ? சுதந்திர புத்தியுள்ள மனிதன் பாவமே செய்திருக்க மாட்டான். சுகத்தை சம்பாதித்துக் கொள்வதற்கும் விருத்தி செய்துகொள்வதற்கும் புண்ணிய காரியங்களை செழிப்பாகச் செய்திருப்பான். ஆனால், எந்த
மனிதனும் சுதந்திரமுள்ளவன்
அல்லன்; கர்மத் தளைகள் அவனைப் பின்தொடர்கின்றன. கர்மத்தின் வழிமுறைகள் விசித்திரமானவை; மனிதனுடைய வாழ்க்கையின் சூத்திரத்தை அவையே இழுக்கின்றன.
இதன்
காரணமாக, புண்ணியத்தை நாம் லட்சியமாகக் கொண்டாலும், பாவத்தை நோக்கி வலிமையாக இழுக்கப்படுகிறோம். நற்செயல்களைத் தேடும் பணியிலேயே நம்முடல் பாவங்களைத் தொட்டுவிடுகிறது.
ரோகம் எது? ஆரோக்கியம்
எது? ஒருவருடைய புண்ணியமோ பாவமோ தீராமல், கர்மவினை கழியாமல், எந்த வைத்தியமும் பலன் தராது.
கர்மத்தை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். எத்தனை ஜன்மம் எடுத்தாலும் இதுவே நிச்சயம். கர்மவினை அனுபவித்து அழிவதற்கு முன்பு, எந்த உபாயமும்
எடுபடாது.
இருப்பினும், ஒருவருடைய பாக்கியத்தால் ஞானியின் அருட்பார்வை கிடைத்தால், அது
வியாதியைத் துடைத்துவிடுகிறது.
பீடிக்கப்பட்டவர் வியாதியைச்
சுலபமாகவும் துன்பமின்றியும்
பொறுத்துக்கொள்வார். வியாதி பொறுக்கமுடியாத வலியையும் கஷ்டத்தையும் கொணர்கிறது. ஞானி தம்முடைய கருணை மிகுந்த பார்வையால் எந்த துக்கமும் ஏற்படாதவாறு வியாதியை நிவாரணம் செய்துவிடுகிறார். இங்கே பாபாவின் சொற்களே பிரமாணம். அதுவே ராமபாணம் போன்ற, குறிதவறாத ஔஷதம்.
ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து
No comments:
Post a Comment