Sunday, January 5, 2014

பாபுஸாஹேப் புட்டி

       பாபுஸாஹேப் புட்டிக்கு ஒருசமயம் குடல் சீதளத்தினால் பேதியும் வாந்தியும் கண்டது.  அலமாரி பூராவும் பலவகையான மருந்துகளால் நிரம்பியிருந்தது. ஆயினும், அம்மருந்துகளில் எதுவுமே நிவாரணமளிக்கவில்லை. பாபுஸாஹேப் மனத்தில் கலவரமடைந்தார்; கவலைப்பட ஆரம்பித்தார்.
    பல தடவைகள் பேதியும் வாந்தியும் ஆகி, பாபுஸாஹேப் க்ஷீணமடைந்து போனார். தினப்படிப் பழக்கமான 'பாபா தரிசனத்திற்குச் செல்வதற்குக்கூட சக்தியற்று இருந்தார்.
    இச்செய்தி பாபாவின் காதுக்கு எட்டியது. அவர் புட்டியை அழைத்துவரச்சொல்லி­, தம்மெதிரில் உட்காரவைத்தார். பாபா கூறினார், ''இதோ பார், இப்பொழுதி­ருந்து நீ மலம் கழிக்கப் போகமாட்டாய். அத்தோடு, ஞாபகமிருக்கட்டும், வாந்தியும் நின்றுவிட வேண்டும்.புட்டியை நேருக்கு நேராகப் பார்த்து, ஆட்காட்டி விரலை ஆட்டிக்கொண்டே அதே வார்த்தைகளை மறுபடியும் கூறினார்.
    அவ்வார்த்தைகளின் தாத்பரியத்தைக் கேட்டு பயந்துபோய், வியாதி உடனே ஓட்டம் பிடித்தது. ஸ்ரீமான் புட்டி சுகமடைந்தார்.  இதுபோலவே, புட்டி முன்னம் ஒருசமயம் பேதியாலும் வாந்தியாலும் அவதிப்பட்டார். அப்பொழுது சிர்டீயில் காலராநோய் கண்டிருந்தது. புட்டிக்குத் தாகத்தால் தொண்டை வரண்டுபோயிற்று; வயிறு எந்நேரமும் குமட்டியது.
     சிர்டீயிலேயே இருந்த டாக்டர் பிள்ளை பல மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார். எதுவும் நிவாரணம் அளிக்காத நிலையில், முடிவாகப் பிள்ளை பாபாவிடம் சென்றார்.  பணிவுடன் பாபாவிடம் எல்லா விவரங்களையும் சொல்­விட்டு, பிள்ளை பாபாவைக் கேட்டார், ''அவருக்குக் காபி கொடுக்க வேண்டுமா? அல்லது தண்ணீரே நல்லதா?
      பாபா டாக்டரிடம் கூறினார், ''அவருக்குப் பால் கொடுங்கள்; பாதாம், பிஸ்தா, அக்ரூட், பருப்புகளும் கொடுங்கள். அவர் குடிப்பதற்கு அரிசிநொய்யும் பருப்புநொய்யும் சேர்த்துக் கஞ்சி போட்டுக்கொடுங்கள். அவருடைய தாகமும் அவஸ்தையும் உடனே ஒழியும். சாராம்சமான விஷயம் இதில் என்னவென்றால், புட்டி அந்தக் கஞ்சியைக் குடித்தவுடனே அவருடைய வியாதி மறைந்தது.
      பாதாம், பிஸ்தா, அக்ரூட், பருப்புகளைச் சாப்பிட்டுக் காலராநோய் 

கண்டவர் நிவாரணம் அடைவதா. இங்கு பாபாவின் வார்த்தைகளே 

நம்பிக்கையின் அஸ்திவாரம்; சந்தேகம் என்பதற்கு இங்கு இடமேதுமில்லை.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...