ஆரம்பத்தில் வெகுகால பரியந்தம் பாபா எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எரிந்துபோன தீக்குச்சிகளையே சேர்த்து ஜோபி நிறைய வைத்திருந்தார்.
பக்தரோ, பக்தரல்லாதவரோ, அவர் எவரிடமும் ஏதும் கேட்கவில்லை. யாராவது ஒருவர் அவர் முன்னால் ஒரு தம்பிடியோ துகாணியோ வைத்தால் அக்காசுக்குப் புகையிலையோ எண்ணெயோ வாங்கிக்கொள்வார். அவருக்குப் புகையிலையின்மேல் பிரேமை; பீடியோ அல்லது சிலீமோ (புகை பிடிக்கும் மண் குழாய்) பிடிப்பார். சிலீம் செய்த ஸேவை எல்லையற்றது; அது புகையாத நேரமேயில்லை.
பிறகு, யாரோ ஒருவருக்குத் தோன்றியது. ஞானியை தரிசனம் செய்ய எப்படி வெறுங்கையுடன் செல்வது? ஆகவே அவர்
கையில் சிறிது தட்சணைஎடுத்துக்கொண்டு சென்றார்.
ஒரு
தம்பிடி கொடுக்கப்பட்டால்
பாபா அதைத் தம் ஜோபியில் போட்டுக்கொள்வார்.
ஆனால், எவராவது இரண்டு பைஸா நாணயத்தை வைத்தால், அதை யார் வைத்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவார். வெகுகாலம் இதுவே அவருடைய கிரமமாக இருந்தது. சில காலத்திற்குப் பிறகு, பாபாவின் மாஹாத்மியம் பரவியது. பக்தர்களுடைய கூட்டம் சிர்டீயில் குழுமியது. சாஸ்திர விதிகளோடுகூடிய பூஜையும் ஆரம்பிக்கப்பட்டது.
சாஸ்திர
விதிகளின்படி, எந்தப் பூஜையும்
பொன்னும் மலர்களும் தக்ஷிணையும்
ஸமர்ப்பணம் செய்யப்படாமல்
நிறைவு பெறாது. இதை நித்தியவழிபாடு செய்தவர்கள் அறிந்திருந்தனர்.
மன்னனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்யும்போதும் பாதபூஜை செய்யும்போதும் குடிமக்கள் பரிசுகளையும் வெகுமதிகளையும் கொண்டுவருகின்றனர். அதுபோலவே குரு பூஜைக்கும் தட்சணை ஸமர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.
தட்சணை கொடுப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைகின்றனர். பொருளை தக்ஷிணையாகக் கொடுப்பவர்கள் உயர்ந்த ஞானத்தை அடைகிறார்கள்; பொன்னை தக்ஷிணையாகக் கொடுப்பவர்கள் மனத்தூய்மையை அடைகிறார்கள்; என்று
வேதம் மொழிகிறது.
அரைத்த
சந்தனத்தை தெய்வத்திற்குப்
பூசுவதால் மங்களம் உண்டாகிறது. அக்ஷதை ஸமர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகிறது. மலர்களும் தாம்பூலமும், செல்வத்தையும் அஷ்ட ஐசுவரியங்களையும் அளிக்கின்றன. அதுபோலவே,தட்சணைநிறைந்த செல்வத்தை அளிக்கிறது.
எப்படிச்
சந்தனமும் அக்ஷதையும்
மலர்களும் தாம்பூலமும் பூஜை திரவியங்களில் முக்கியமானவையோ, அப்படியே தக்ஷிணையும் சுவர்ணபுஷ்பமும் மிகுந்த செல்வத்தை அடைய முக்கியமானவை.
தெய்வபூஜைக்கு
தட்சணை அவசியமானது; ஒரு
விரதத்தை முடிக்கும்போதும்தட்சணைகொடுக்கப்படவேண்டும். உலகியல்
விவகாரங்களெல்லாம் பணத்தைக்
கொடுத்தும் வாங்கியுமே நடக்கின்றன.
தங்களுடைய புகழையும் கௌரவத்தையும்
தக்கவைத்துக்கொள்ள, மக்கள் அம்மாதிரியான சமயங்களில் தாராளமாகவே செலவு செய்கின்றனர். (கல்யாணம், கிருஹப் பிரவேசம் போன்றவை) 'ஹிரண்ய
கர்ப்ப கர்ப்பஸ்தம்’ என்று ஆரம்பிக்கும் மந்திரத்தை ஓதி, ஒரு தெய்வத்தின் பூஜையில் தட்சணை அளிக்க வேண்டுமென்பது வழக்கமாக இருக்கும்போது, ஒரு ஞானியைப்
பூஜை செய்யும்போது ஏன் தட்சணை கொடுக்கக்கூடாது?
ஒரு
மஹானை தரிசனம் செய்யப் போகும்போது
அவரவர்களுடைய ஞானத்திற்கேற்றவாறு
பலவிதமான எண்ணங்களுடனும் நோக்கங்களுடனும்
மக்கள் செல்கின்றனர். இது
விஷயத்தில் ஒருமையை எதிர்பார்க்கமுடியாது.
சிலர் பக்தியுடனும் விசுவாசத்துடனும் செல்கின்றனர். சிலர் ஞானியினுடைய சக்தியை சோதனை செய்யச் செல்கின்றனர். சிலர் தங்களுடைய மனத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால்தான் அவர் ஞானி என்று நினைக்கின்றனர்õ
சிலர்
நீண்ட ஆயுளை வேண்டுகின்றனர்.
சிலர் யானை, பொன், செல்வம், ஸம்பத்துகள், சொத்து - இவற்றை வேண்டுகின்றனர். வேறு சிலர் புத்திரனையும் பௌத்திரனையும் (பேரனையும்) வேண்டுவர். சிலர் குன்றாத செல்வாக்கையும் பதவியையும் வேண்டுவர்.
ஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் பிரமிக்கத்தக்கவை. கேலி செய்யவும் வம்பு பேசவும் வந்தவர்கள், அவர்களுடைய துர்புத்தி அழிக்கப்பட்டு பாபாவின் சரணகமலங்களைத் தொழுவதற்குத் தங்கிவிட்டனர். சிலருக்கு அவ்வளவு பாக்கியம் கிடைக்காவிட்டாலும், தங்களுடைய நடத்தைக்காக அனுதாபமாவது படுவார்கள். நேரடியான அனுபவம் பெற்று, அஹங்காரத்தை விலக்கிவிட்டு நம்பிக்கையை திடமாக்கிக் கொள்வார்கள்.
இவர்களனைவரும்
இவ்வுலக வாழ்க்கையில்
உழலும் சாதாரண மக்களே.தட்சணைஅளிப்பதால் அவர்கள் மனத்தூய்மை அடைய வேண்டுமென்றே பாபா விரும்பினார்.
''யாகத்தால், தானத்தால், தவத்தால்' என்னும் தெளிவான சொற்களால் தட்சணை அளிப்பது ஒரு 'ஸாதனை யுக்தி” என்று ஆத்மஞானத்தை
நாடுபவர்களுக்கு வேதம்
போதனை செய்கிறது.
அடியவர், உலகியல் நன்மைகளை விரும்பினாலும் ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பினாலும், தாம் விரும்பியதை அடைவதற்காகவும் தம்முடைய சொந்த நலனுக்காவும் தம் குருவுக்கு தட்சணை அளிக்க வேண்டும்.
கருணாஸாகரமான
ஸாயீநாதர், பேராசையால்
பீடிக்கப்பட்ட மனித இனத்தை அவர்களுடைய நல்வாழ்வை மனத்திற்கொண்டு, கைகொடுத்துத் தூக்கி விடுதலை செய்கிறார்.
No comments:
Post a Comment