சாயிதரிசனம்
இதழிலிருந்து ஆத்ம ஞானத்தைப் பற்றி புரிந்துக்கொள்கிற
மனிதன், ஏன் முழுக்க முழுக்க இறைவனாக முடிவதில்லை?
எஸ்.ஆர்.கோபாலகிருஷ்ணன்,
காஞ்சிபுரம்
நம்முடைய
மேதைத்தனம் , சாஸ்திர ஞானம், பிரசங்கம் போன்றவை ஆத்மாவைப் பற்றியும், அதனுடைய
இயல்பைப் பற்றியும் நமக்கு நன்றாக போதிப்பதால் நாம் அதைப் பற்றி
அறிந்துக்கொள்கிறோம். இது ஆத்ம
ஞானமல்ல....ஆத்மா பற்றிய அறிவு மட்டுமே....
இந்த அறிவை
நடைமுறைப்படுத்துவது தான் ஆத்மஞானம். அதை
நடைமுறைப்படுத்த வேண்டுமானால், அதைத்தவிர வேறு எண்ணங்கள், ஆசைகள் மனதில்
இருக்கக்கூடாது. பாவ காரியங்களில்
ஈடுபடக்கூடாது. எந்த பந்தத்திலும்
சிக்கிக்கொள்ளக்கூடாது. மனதில் எப்போதும் நிரந்தரமான அமைதி இருக்க வேண்டும். சூழல்களில்
சிக்கி கவலைக்கு இடம் தரக்கூடாது. ஒரு
செயலைச்செய்தால் அந்த செயலுக்கான பலனில் பற்று வைக்கக் கூடாது, பலனை
எதிர்பார்க்கவும் கூடாது. செய்யக்கூடாதவை
என நமது சாஸ்திரங்கள் எவற்றையெல்லாம் தடை செய்கின்றனவோ அவற்றையெல்லாம் விலக்க
வேண்டும். இதற்கு மேல், பாவச்செயல்களை
விலக்கி, குருவின் பாதங்களில் பணிந்து கிடந்து தியானத்தில் மூழ்கிக்கிடக்க
வேண்டும்.
இப்படியெல்லாம்
செய்தால் ஆத்ம ஞானம் சித்திக்கும். அவனே
இறைவனாகவும் முடியும். நாம் அப்படியிருக்க
முடிவதில்லை. ஒரு நிமிடம் கடவுள்
போலிருக்கிறோம். மறுமுறை மிருகமாகி
விடுகிறோம். கடவுள் பாதி மிருகம் பாதி
சேர்ந்து செய்த கலவைதான் மனிதன்
சாயி
புத்ரன் பதில்கள்
சாயிதரிசனம்
இதழிலிருந்து
No comments:
Post a Comment