Monday, January 6, 2014

பாலா கண்பத்

      பாலா கணபத் என்னும் பெயர்கொண்ட தையற்கார ஜாதியைச் சேர்ந்த தீவிர பக்தரொருவர் ஒருசமயம் மசூதிக்கு வந்து பாபாவின் எதிரில் வந்து நின்று, தீனமான குர­ல் வேண்டினார்,  ''நான் என்ன பெரும் பாவம் செய்துவிட்டேன்? ஏன் இந்த மலேரியா ஜுரம் என்னை விடமாட்டேன் என்கிறது? பாபா, எத்தனையோ உபாயங்களைச் செய்து பார்த்துவிட்டேன்; ஆனால், இந்த ஜுரம் என் உடலைவிட்டு நீங்கமாட்டேன் என்கிறது. ஓ, நான் இப்பொழுது என் செய்வேன்? எத்தனையோ மருந்துகளையும் கஷாயங்களையும் அருந்தி பார்த்துவிட்டேன்.  நீங்களாவது இந்த ஜுரம் நீங்குவதற்கு ஒரு நிவாரணம் சொல்லுங்கள்.

      பாபாவினுடைய இதயம் கனிந்தது. பதில் சொல்லும் வகையில் மலேரியா நீங்க விநோதமான ஓர் உபாயம் சொன்னார். அது என்னவென்று கேளுங்கள்.

      ''லக்ஷ்மி கோயிலுக்கருகி­ருக்கும் கறுப்புநாய் தின்பதற்குச் சில கவளங்கள் தயிர்ச்சோறு கொடு; உடனே உன்னுடைய ஜுரம் குணமாகிவிடும்.

      பாலா உணவு தேடுவதற்காகச் சிறிது பீதியுடன் வீடு திரும்பினார். அதிருஷ்டவசமாக, ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் சோறு இருப்பதைப் பார்த்தார்; அருகிலேயே தயிரும் இருந்தது.

     'தயிரும் சோறும் கிடைத்தது மிக்க நன்று. ஆயினும், இந்த வேளையில் கோயிலுக்கருகில் கறுப்புநாய் இருக்குமா? என்று பாலா யோசனை செய்துகொண்டே போனார்.

    தேவையில்லாத கவலை குறிப்பிட்ட இடத்தை அவர் சென்றடையுமுன்பே ஒரு கறுப்புநாய் வாலை ஆட்டிக்கொண்டு தம்மை நோக்கி வருவதைப் பார்த்தார்.

     பாபா குறிப்பிட்டவாறே அனைத்தும் நடப்பதுபற்றி பாலா கணபத் மிக்க ஆனந்தமடைந்தார். உடனே அவர் நாய்க்குத் தயிர்சோறு போட்டார். பிறகு, பாபாவிடம் சென்று நடந்ததனைத்தையும் சொன்னார்.

     யார் இந்த நிகழ்ச்சியைப்பற்றி என்ன சொன்னாலும், சாராம்சம் என்னவென்றால், அப்பொழுதே மலேரியா ஜுரம் பாலாவை விட்டு நீங்கியது. பாலா  நிவாரணம் அடைந்தார்.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...