Saturday, January 18, 2014

நாச்னேவின் அனுபவம்

மக்கள் ஆரத்திக்காக மசூதியில் கூடிக்கொண்டிருந்தபோது, அவர்களிடையே இருந்த நாச்னே தனது அனுபவத்தினைக் கூறுவதைக் கேளுங்கள்:

பாபா என்னிடம் உணவு உண்ணுமாறு கூறினார்.  அது ஏகாதசி தினம் என்றேன்.  வழக்கமாக நான் ஏகாதசி விரதம் இருப்பதில்லை.  ஆனால், எனது இரண்டு நண்பர்கள் விரதம் இருக்கவே, அவர்கள் இருவரும் ஏதும் உண்ணாமல் இருக்கும்போது, நான் மட்டும் உண்பதில் எனக்கு விருப்பம் இல்லாமையால், அவர்கள் செய்வதையே நானும் பின்பற்றினேன்.  ஆனால் பாபா, நான் பட்டினி கிடப்பதை விரும்பவில்லை. அவர் எனது துணைவர்களைக் குறிப்பிட்டு, இவர்கள் பைத்தியக்காரர்கள்.  நீ வாடாவிற்க்குப் போய் சாப்பிடு என்றார்.

வாடாவில் உணவு பரிமாறுபவர், “போயும், போயும் ஏகாதசியன்று சாப்பாட்டுக்கு வந்துவிட்டார்என முணுமுணுத்து, ஆரத்திக்கு முன்பு உணவு தரமாட்டேன் என்று கூறிவிட்டார்.

மசூதிக்கு திரும்பி வந்தபோது, என்ன சாப்பிட்டாயிற்றா?என பாபா கேட்டார். ஆரத்தி முடிந்த பிறகு சாப்பிடுகிறேன் என்றேன். பாபா மீண்டும் வற்புறுத்தி, நீ உணவு உண்டு வந்தபிறகே ஆரத்தி ஆரம்பிக்கும்என்றார்.  இம்முறை வாடாவில் உணவு பரிமாறுபவர் அதற்க்கு இணங்க வேண்டியதாயிற்று.  அவர் எனக்கு உணவு பரிமாறினார். சாப்பிட்ட பிறகு, மெவுஸி என்ற பெண்மணி பாபாவிற்க்காக கொண்டு வந்து கொடுத்த பீடாக்களை, என்னிடம் கொடுத்து, சாப்பிடுமாறு பாபா கூறினார்.

ஏகாதசி தினத்தன்று வெற்றிலை பாக்கு போடுவது வழக்கமில்லாததால் நான் தயங்கினேன்.  பாபா மீண்டும் அதை சாப்பிடு என்றார். அவருக்குக் கீழ்படிந்து பீடாவை மென்றேன்.


ஆச்சார்யா பரத்வாஜ் சுவாமிகள் தொகுத்த ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள் என்ற புத்தகத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...