Sunday, January 5, 2014

சூலைநோய் நிர்மூலம்




       ஹரதா நகரத்தில் வாழ்ந்த கிருஹஸ்தரொருவர் சூலைநோயினால் (வயிற்றுவலி­யால்) பதினான்கு ஆண்டுகள் அவதிப்பட்டார். எல்லா வைத்தியமுறைகளையும் செய்து பார்த்தார்; பிரயோஜனம் ஏதுமில்லை.         அவருடைய பெயர் தத்தோ பந்த். சிர்டீயில் ஸாயீ என்று அழைக்கப்பட்ட மஹா ஞானி ஒருவர் இருக்கிறார் என்றும் அவருடைய தரிசனமே எல்லா வியாதிகளையும் நிவிர்த்தி செய்துவிடுகிறது என்றும் ஒரு செவிவழிச் செய்தி அவரைச் சென்றடைந்தது.          இக்கீர்த்தியைக் கேள்விப்பட்டு, அவர் சிர்டீக்குச் சென்று பாபாவின் பாதங்களில் தம் சிரத்தை வைத்துக் கருணை வேண்டினார்.
 ''பாபா, பதினான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இச்சூலைநோய் என்னை விடமாட்டேன் என்கிறது. போதும், போதும், நான் பட்டது போதும். நான் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டேன்; இனிமேலும் இவ்வலி­யை அனுபவிப்பதற்கு எனக்கு சக்தி இல்லை. நான் யாருக்குமே துன்பம் இழைத்ததில்லை; எவரையும் ஏமாற்றியதில்லை. மாதா பிதாக்களை அவமதித்ததில்லை. பூர்வ ஜன்மத்தில் என்ன கர்மம் செய்தேன் என்று தெரியவில்லை; அதன் காரணமாக இந்த ஜன்மத்தில் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறேன்”.

              ஞானிகளுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரஸாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை.
 தத்தோ பந்தினுடைய அனுபவம் அவ்வாறு இருந்தது. பாபாவினுடைய கரம் அவருடைய சிரத்தின்மீது வைக்கப்பட்டு, விபூதியையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்ட பின்னர் அவருடைய மனம் அமைதியடைந்தது.  மஹராஜ் அவரைச் சிலநாள்கள் சிர்டீயில் தங்கும்படி செய்தார். படிப்படியாக அவருடைய சூலைநோய் நிர்மூலமாகியது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...