Monday, January 20, 2014

ஸாயீ மஹானுபாவர்.


பரோபகாரமே உருவெடுத்துவந்த ஸாயீ மற்றவர்களின் நன்மைக்காகக் கடுமையாக உழைத்தார். ஒருபோதும் விரோதபாவத்தையே அறியாத அவர் இடைவிடாது நற்செயல்களிலேயே ஈடுபட்டிருந்தார். 
மனித உடல் ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும், வேறுவிதமாக இருந்தாலும் கர்மபந்தத்தி­ருந்து விடுபடமுடியாது. ஆகவே, குருபாதங்களில் பிரீதியுடன் மனத்தை உள்முகமாகச் செலுத்துங்கள். 
பின்னர், குருபாதங்களில் பிரேமையுடைய பக்தர்களின் யோகக்ஷேமத்தை, குரு சிரமமேதுமின்றி அளிக்கும் மிக உத்தமமான அனுபவத்தை அடையுங்கள். 
 இது கேட்டாலும் கிடைக்காத நிலை; ஆயினும், குருவின் பெருமையைப் பாடுவதால் சுலபமாகக் கிடைக்கும். பெருமுயற்சிகள் செய்தும் அடையமுடியாத நிலை; குருகிருபையின் பலத்தால் தானாகவே உங்களிடம் வந்துசேரும்.
             
அவரை நுணுக்கமாகக் கவனிக்கவேண்டுமென்ற நோக்கத்தில் கர்வத்துடன் வந்தவர்கள், கர்வபங்கமடைந்து தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் சுகமாக வீடு திரும்பினர். 
 இறையாண்மையால் ஸ்ரீஹரி பூரணமாக நிரம்பியிருப்பதுபோல, வெற்றி, செல்வம், கொடை, ஞானம், சாந்தி, பற்றற்ற நிலை ஆகிய ஆறுகுணங்களால் ஸ்ரீஸாயீ பகவான் நிரம்பியிருந்தார். 
 பிரபஞ்ச உணர்வால் நிரம்பிய ஸாயீ, நாம் அர்ச்சனையோ பூஜையோ பஜனையோ செய்யாமலேயே நமக்கு தரிசனம் அளிப்பது நம்முடைய வானளாவிய பாக்கியமே!

 பக்தியிருக்கும் இடத்தில் இறைவன் இருக்கின்றான் என்பது வழக்கு. ஆனால், நமக்கோ பக்தி குறைபடுகிறது. ஆயினும்,  இயல்பாகவே தீனர்களிடம் தயை காட்டும் ஸாயீ, மஹானுபாவர்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...