Friday, January 17, 2014

கடவுளை சோதிக்காதே!


ஒரு நாள் ஏழைப் பிராமணர் ஒருவர் பணத்துக்காக பாபாவை அணுகினார்.  பாபா அவரிடம் இறைச்சியும் மணலும் கலந்த ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, வீட்டிற்க்குப் போய் உன் குழந்தகளுடன் உண்ணு.  ஆனால் வழியில் அதை திறக்காதே என்று கூறினார்.

பிராமணருக்கு பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது.  பாபாவிடம் விடை பெற்றுக்கொண்ட பிறகு, தமது ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல், வழியில் ஓடை ஒன்றின் அருகில் அமர்ந்து, பொட்டலத்தைப் பிரித்து பார்க்க, அதில் இறைச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சலிப்புற்றாவராக, அதை ஓடையில் வீசி எறிந்தார்.  இறைச்சி தண்ணீரைக் தொட்டவுடன் தங்கமாக மாறி உடனே நீருக்குள் அமிழ்ந்து போவதைக் கண்டு அவர் மிகவும் வியப்படைந்தார்.

பாபா அன்புடன் கொடுத்த அரிய பரிசை அனுபவிக்க விடாமல் செய்த்து அவரது நம்பிக்கைக்குறைவே என்பது தெளிவு. இறைச்சித்துண்டு பாபாவின் நம்பிக்கைக்குறைவே என்பது தெளிவு.

இறைச்சித்துண்டு பாபாவின் போதனையைக் குறிக்கும் அடையாளமாகும்.  வைதீகமானவர்களுக்கு அது தகுதியற்றதாகத் தோன்றினும் உண்மையில் அது மிகவும் அரியதே!


ஆச்சார்யா பரத்வாஜ் சுவாமிகள் தொகுத்த ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள் என்ற புத்தகத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...