ஒரு முறை ஆலந்தியிருந்து ஒரு சன்னியாசி சமர்த்த ஸாயீயை தரிசனம் செய்தவற்காக சிர்டீக்கு வந்தார். பாபாவினுடைய ஆசிரமத்திற்கு (மசூதிக்கு) வந்து சேர்ந்தார்.
அவர், காதில் ஏதோ ஒரு நோயினால் இன்னல்பட்டு, சரியான தூக்கமுமின்றி அவதிப்பட்டுக்கொண் டிருந்தார். ஏற்கெனவே ஓர் அறுவைச்சிகிச்சையும் நடந்திருந்தது. ஆனால் எள்ளளவும் உபயோகம் ஏற்படவில்லை.
காதுவலி பொறுக்கமுடியாமலிருந்தது; எந்த உபாயமும் வேலை செய்யவில்லை. ஆகவே, அவர் ஆலந்தியிருந்து கிளம்பி பாபாவின் ஆசீர்வாதம் பெறுவதற்காக வந்தார்.
சன்னியாசி ஸாயீயின் பாதங்களில் விழுந்து வணங்கி, உதீ பிரஸாதம் வாங்கிக்கொண்டு, பாபாவினுடைய அருள் தமக்கு எப்பொழுதும் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.
மாதவராவ், சன்னியாசிக்காக, அவருடைய காதுரோகத்தை நிவிர்த்தி செய்யுமாறு பாபாவை விநயத்துடன் கேட்டுக்கொண்டார். ''அல்லா சுகம் செய்துவிடுவார்” என்று மகராஜ் உறுதியளித்தார்.
இந்த ஆசீர்வாதத்தை வாங்கிக்கொண்டு, சன்னியாசி புணேவுக்குத் திரும்பினார். பொறுக்கமுடியாத வலி அப்பொழுதே நின்றுவிட்டது, என்னும் செய்தி தாங்கிய கடிதம் எட்டு நாள்கள் கழிந்து வந்தது.
''வீக்கம்
என்னவோ இன்னும் இருக்கிறது; இன்னும் ஓர் அறுவைச்சிகிச்சை செய்யப்படவேண்டுமென்ற பரிந்துரை இருந்தது; அதற்காகவே
நான் மறுபடியும் மும்பயி
(பம்பாய்) சென்றேன்.
''அதே
டாக்டரிடம் சென்றேன்.
பாபாவை சங்கடத்தில் ஆழ்த்திவிட்டேனோ என்னவோ தெரியவில்லை. என்னுடைய காதைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டரால் வீக்கம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, டாக்டர் அறுவைச்சிசிச்சை செய்யவேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்.”
சன்னியாசியின்
பெரிய கவலை ஒழிந்தது. எல்லாரும் பாபாவின் லீலையைக் கண்டு வியப்படைந்தனர்.
ஸ்ரீ சாயிசத்சரித்திரத்திலிருந்து
No comments:
Post a Comment