ஸபாமண்டபத்தின் தரைக்குத் தளம் போடும் வேலை ஆரம்பிப்பதற்கு எட்டு நாள்களுக்கு முன்பு மஹாஜனி காலராநோயினால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
அவருக்குப் பல தடவைகள் பேதியாகியது. ஆனால், இதயத்தின் ஆழத்தில் பாபாவின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, மிகவும் நொந்துபோயிருந்த நிலையிலும் எந்த மருந்தையும் வைத்தியமுறையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
பாபா பூரணமான அந்தர்ஞானி என்று மஹாஜனிக்குத் தெரியும். ஆகவே, தம்முடைய நோய்பற்றி ஏதும் பாபாவுக்குத் தெரிவிக்கவில்லை.
பாபா விருப்பப்பட்டபோது அவராகவே அந்த நோயை நீக்கிவிடுவார் என்னும் முழு நம்பிக்கையுடன் தம்முடைய வேதனையையும் துன்பத்தையும் பொறுத்துக்கொண்டார்.
பாபா விருப்பப்பட்டபோது அவராகவே அந்த நோயை நீக்கிவிடுவார் என்னும் முழு நம்பிக்கையுடன் தம்முடைய வேதனையையும் துன்பத்தையும் பொறுத்துக்கொண்டார்.
எவ்வளவு துன்பப்பட்டாலும் சரி, தினப்படிப் பூஜைக்கும் ஹாரதிக்கும் செல்வதற்குத் தடை ஏற்படக்கூடாது என்றே அவர் விரும்பினார்.
பேதி அடிக்கடியும் பலமுறைகளும் வரையின்றிப் போனபோது, தினப்படி ஹாரதி ஸேவையை இழந்துவிடக்கூடாது என்னும் நோக்கத்தில் அவர் என்ன செய்தாரென்றால், நீர் நிரம்பிய ஒரு தாமிரச் சொம்பை இருட்டிலும் சுலபமாக எடுக்கக்கூடிய இடத்தில் மசூதியில் தம்முடன் வைத்துக்கொண்டார்.

பாபாவின் பக்கத்தில் அமர்ந்து, பாபாவினுடைய பாதங்களைப் பிடித்துவிட்டுக் கொண்டு தம்முடைய நித்திய பழக்கப்படி ஹாரதி நேரத்தில் தவறாது அங்கிருந்தார்.
வயிறு சத்தமிட்டாலோ குழம்பினாலோ நீர்ப்பாத்திரம் அருகிலேயே இருந்தது. தனிமையான இடத்திற்குச் சென்று மலம் கழித்துவிட்டுத் திரும்பி வந்துவிடுவார்.
இந்நிலையில், தாத்யா (கணபத் கோதே பாடீல்) தரைக்குத் தளம் போடுவதற்கு அனுமதி கேட்டார். பாபா அனுமதியளித்தார். பாபா அவரிடம் என்ன சொன்னாரென்று கேளுங்கள்.
''நாங்கள் இப்பொழுது லெண்டிக்குப் போய்க்கொண் டிருக்கிறோம். நாங்கள் எப்பொழுது திரும்பி வருகிறோமோ, அப்பொழுது தளம் போடும் வேலையை ஆரம்பியுங்கள்.”
பிறகு பாபா திரும்பிவந்து, தம்முடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்துகொண்டார். காகாமஹாஜனியும் சரியான நேரத்தில் அங்கு வந்து, பாபாவினுடைய பாதங்களைப் பிடித்துவிட ஆரம்பித்தார்.
கோபர்காங்விருந்து குதிரைவண்டிகள் வந்தன. பம்பாயிருந்து சில பக்தர்களும் வந்து சேர்ந்தனர். பூஜை சாமான்களை எடுத்துக்கொண்டு பக்தர்கள் மசூதியின் படிகளில் ஏறி பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர்.
இக்குழுவினருடன் அந்தேரியிருந்து1 ஒரு பாடீல் மலர்கள், அக்ஷதை இன்னும் பிற பூஜை சாமான்களை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். தம்முடைய முறை வருவதற்காகக் காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
திடீரென்று, கீழேயிருந்த முற்றத்தில், தேர் வழக்கமாக நிறுத்தப்படும் இடத்தில் கூந்தாயின் முதல் வெட்டு விழுந்தது. தளம் போடும் வேலை ஆரம்பமாகியிருந்தது.

சத்தத்தைக் கேட்டவுடனே பாபா நரஸிம்ஹ அவதாரம் எடுத்தவர்போல் கண்களைப் பயங்கரமாக உருட்டிக்கொண்டு, விசித்திரமான குரல் சத்தம் போட்டார்.
''யார் அங்கே கூந்தாயால் குத்தினான்? அவனுடைய முதுகெலும்பை உடைத்துவிடுவேன்” என்று
கூவிக்கொண்டே தம்முடைய ஸட்காவை எடுத்துக்கொண்டு எழுந்தார். சுற்றி இருந்த அனைவரும் பீதியடைந்தனர்.
பணியாள் கூந்தாயைக் கீழேபோட்டு விட்டுத் 'தப்பித்தேன், பிழைத்தேன்’ என்று ஓடிவிட்டான்; எல்லாரும் ஓடிவிட்டனர். பாபா காகாவின் கையைத் திடீரென்று பிடித்தபோது அவரும் திடுக்கிட்டுப்போனார்.
''நீர் எங்கே போகிறீர்? இங்கு உட்காரும்” என்று பாபா கூறினார். இதற்குள் தாத்யாவும் லக்ஷ்மிபாயியும் அங்கு வந்தனர். பாபா அவர்களைத்
தம் மனம் திருப்தியடையும்வரை கண்டபடி ஏசினார்.
முற்றத்திற்கு வெளியே இருந்தவர்களையும் பாபா வசைமாரி பொழிந்தார். திடீரென்று அங்கே கிடந்த வறுத்த வேர்க்கடலை நிரம்பிய பை ஒன்றை பாபா எடுத்தார்.
முற்றத்திற்கு வெளியே இருந்தவர்களையும் பாபா வசைமாரி பொழிந்தார். திடீரென்று அங்கே கிடந்த வறுத்த வேர்க்கடலை நிரம்பிய பை ஒன்றை பாபா எடுத்தார்.
பாபா எதிர்பாராமல் கோபாவேசம் கொண்டபோது, மசூதியிலிருந்து உயிருக்கு பயந்து சிதறி ஓடியவர்களில் யாராவது ஒருவருடைய கையிலிருந்து இந்தப் பை விழுந்திருக்க வேண்டும்.
வேர்க்கடலை ஒரு சேராவது இருக்கும். பிடிப்பிடியாக எடுத்து, உள்ளங்கைகளால் தேய்த்து வாயால் ஊதித் தோலை நீக்கினார் பாபா.
ஒரு பக்கம் வசவுகளைப் பொழிந்துகொண்டே மறுபக்கம் வேர்க்கடலையைத் தேய்த்துத் தோல் நீக்கி ஊதித் தள்ளினார். சுத்தம் செய்யப்பட்ட கடலையை மஹாஜனியைத் தின்னவைத்தார்.
''தின்றுவிடும்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி மஹாஜனியின் கையில் வேர்க்கடலைகளைத் திணித்தார். அவ்வப்போது தாமும் சிறிது வாயில் போட்டுக்கொண்டார். இவ்விதமாக முழுப் பையும் காயாகியது.
வேர்க்கடலை காயானவுடன், ''தண்ணீர் கொண்டு வாரும், எனக்கு தாகமாக இருக்கிறது” என்று பாபா சொன்னார். காகா ஜாடி நிறையத் தண்ணீர் நிரப்பி பாபாவுக்குக் கொண்டுவந்தார். அதிலிருந்து தண்ணீர் குடித்துவிட்டு, காகா மஹாஜனியையும் குடிக்கச் சொன்னார் பாபா.
காகா தண்ணீர் அருந்திக்கொண் டிருந்தபோதே பாபா அவரிடம் சொன்னார். ''இப்பொழுது போம், உம்முடைய பேதி நின்றுவிட்டது. ஆனால், எங்கே? ஓ, எங்கே போய்விட்டனர் அந்த பிராமணர்களெல்லாம்? போய் அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு வாரும்.”

சிறிது நேரம் கழித்து அனைவரும் திரும்பினர்; மசூதி முன்போலவே நிரம்பி வழிந்தது. மறுபடியும் தளம் போடும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. காகா மஹாஜனியின் காலராவும் ஒழிந்தது.
ஆஹா! பேதிக்கு எப்படிப்பட்ட மருந்து! உண்மையான மருந்து ஞானியின் சொல் அன்றோ! எவர் அதைப் பிரஸாதமாக எடுத்துக்கொள்கிறாரோ, அவருக்கு மருந்தேதும் தேவையில்லை.
ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment