Monday, July 31, 2017

புத்திரபாக்கியம்



ஹர்தாவைச்  சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை. 1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச்  சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்; ஆனால்  அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்கு  செல்லவில்லை. 1911-ம்  ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஷிர்டிக்கு  பாபாவிடம் வந்தார்.  அப்போது அவரிடம் பாபா கோபமாக இவ்வாறு கேட்டார்.
பாபா : என்ன! திமிறு  ஏறி விட்டதா உனக்கு? உன் பிராரப்தத்தின்  படி (விதிப்படி) உனக்கு ஏது ஆண் குழந்தை?  நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.
இதிலிருந்து தத்தர், பாபா வேறு வேறு அல்ல என நாம் புரிந்துக்கொள்ளலாம். மேலும் பாபாவின் மற்றொரு அடியவரான தாமோதர ராசனேவிற்கு கூட,  பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரப்பேறு அருளினார் என சத்சரித்திரம் தகவல் அளிக்கிறது.

நான் அவர்களை என்னிடம் இழுத்துக்கொள்கிறேன்


ஒருமுறை பக்தர் ஒருவர், உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது, பாபா "ஒருபோதும் அப்படி செய்யாதே. எனது மக்கள் முதலில் அதற்காகத்தான் என்னை நாடி வருகிறார்கள். தமது ஆசைகள் நிறைவேறி, வாழ்க்கையில் சவுகரியத்தை அடைந்த பிறகு, அவர்கள் என்னை பின்பற்றி ஆன்மீகத் துறையிலும் முன்னேறுகிறார்கள். என்னைச் சேர்ந்தவர்களை தொலை தூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன். நானேதான் அவர்களை என்னிடம் வரவழைக்கிறேன். அவர்கள் தம் இச்சைப்படி தாமே வருவதில்லை. நான் அவர்களை என்னிடம் இழுத்துக்கொள்கிறேன்" என்றார். இச்சொற்கள் இன்றும் பலித்து வருகின்றன.ஸ்ரீ சீரடி சாய் பாபா

Sunday, July 30, 2017

என்றும் துணை நிற்பேன்!!!



என் அன்புக்குழந்தையே!  
உன்னை நான் என் வசம் வழிப்படுத்தியது இந்த ரு ஜென்மத்தில் மட்டும் அல்ல. ஏழேழு ஜென்மாய், உன் சாய் அப்பா, நான் உன்னுடன் வாழ்க்கையில் எப்போதும் பயணிக்கிறேன். என் குழந்தைகள் சொல்லித்தான், அவர்கள் பிரச்சினைகளும் துன்பங்களும், உன் சாய் அப்பாக்கு தெரியவரும் என்று நினைக்கிறாயா? உன் அப்பா நான் அகண்டமாக இந்த உலகத்தில் இருக்கையில், நடக்கின்ற எல்லா விஷயங்களையும் நான் அறிவேன்.
உன் வாழ்க்கையில் இருந்து கோபத்தைத் தூக்கி எறி.  பொறுமையைக் கடைப்பிடி. யார் உன்னை அவமானப்படுத்தினாலும், வாக்குவாதம் செய்யாமால், நீ அமைதியாக இரு. மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கான காலம் வந்து விட்டது. நீ நிச்சயம் வெற்றி பெற்று, நிம்மதியுடன் வாழ்வாய். உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை, உன்னை விலகிப்போகும்படி நான் செய்வதும் இல்லை. உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

எந்த கெடுதலும் உன்னை நெருங்க முடியாது

 அன்பு குழந்தையே!
 உனது கவலைகளுக்கு காரணம், உனது கர்மவினை என்றேன், நீயோ நான் ஏதும் பாவம் செய்யவில்லையே, எந்த வகையிலும் தவறு செய்யவில்லையே என்றாய், நீ இந்த ஜென்மத்தில் எதையும் செய்யவில்லைதான், ஆனால் இதற்கு முந்தைய ஜென்மங்கள் எப்படி இருந்தன என்பது உனக்கு தெரியாதே! அதன் விளைவுகளாகக் கூட இந்த துன்ப நிலை என்பதை நீ உணர்ந்து கொள்ளலாமே! 
பழைய ஜென்ம விஷயங்களைச் சொல்லி என்னை சமாதானபடுத்த நினைக்காதீர்கள். இதற்கு என்ன காரணம் என்பதை சொல்லிவிடுங்கள் என நீ கேட்கலாம். இறைவனின் திருவிளையாடல் உனது வாழ்வில் நடப்பதற்காகவும் நீ துன்பத்தை ஏற்கவேண்டிய நிலை உள்ளது என்பதை மறக்காதே! அப்படியானால் என் கஷ்டம் தொடர்கதையாக இருக்கப் போகிறதா, என கேட்க தோன்றுகிறதா! நிச்சயமாக இல்லை. 
எப்போது நீ என்னை உறுதியாகப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தாயோ, அப்போதே நீ விடுதலையின் படியில் காலை வைத்துவிட்டாய் என்பதை உறுதியாக நம்பு. அப்படியானால் உனக்கு விடுதலை உறுதியல்லவா. 
இந்த சாயி உம்முடைய வியாதியையும் வலியையும் பிரச்சினை போன்ற எதையும் நிர்மூலமாக்கி விடுவான். அனைவர் மீதும் கருணைகொண்ட இந்த பக்கீர் அன்புடன் உன்னையும் பாதுகாப்பான். இப்போது நீ பிரச்சனைகள் தடங்கல்கள் எனும் கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம், துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்து போயிருக்கலாம். அதைப்பற்றி வருத்தப்படாதே! அமைதியாயிரு! நம்பிக்கையோடு என் நாமத்தை இடைவிடாது சிந்திப்பவர்கள் துக்கப்படுவது இல்லை. என் மீது விசுவாசம் கொண்ட உனது துக்க நாட்களை முடித்து வைக்க எனக்கு வெகுநேரம் ஆகாது. எனது ஆலய படிகளில் கால் வைத்த பிறகு நீ சுகத்தின் மீதுதான் சவாரி செய்யப்போகிறாய். எனது நாமம் உனது உள்ளத்திலும், எனது யோக சக்தியான உதி உன் நெற்றியிலும் இருக்கும் வரை எந்த கெடுதலும் உன்னை நெருங்க முடியாது................................ சாயியின் குரல்




Saturday, July 29, 2017

பாபாவின் உதி



பாபாவின் உதி  தனது குழந்தைகளுக்கு அவர் வழங்கியுள்ள கொடை.. அவர் விட்டுச் சென்றிருக்கும் அன்பான சொத்து. பாபாவிடமிருந்து,  தங்களது தந்தையிடமிருந்து, அவரது குழந்தைகளுக்கு கிடைத்திருக்கும் விலை மதிப்பில்லா வாரிசுரிமை.
அவரது குழந்தைகள் அனைவரும், நீராடியபின் வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டுக் கிளம்பும் போது அல்லது புதிய முயற்சியிலோ பணியிலோ ஈடுபடுவதற்கு முன்பும் தங்களது நெற்றியில் உதியைப் பூசிக்கொள்வதை ஒரு நியதியாகவே கொள்ளவேண்டும். ஒருதுளி உதியைத் தண்ணீரில் கரைத்து காலையில் அன்றாட தினத்தை துவக்குவதற்கான முதல் வேலையாகவும், இரவில் கடைசி முறையாகவும் உதி என்ற தேனைப் பருகவேண்டும்.
எவருக்காவது உடல் நலமின்றி ஆனாலோ அல்லது நோயுற்றிருந்தாலோ அவர்களை நோயிலிருந்து விடுவிக்க பாபாவிடம் உண்மையாகப் பிரார்த்தித்துக் கொண்டு உதியை தண்ணீரில் கலந்து கொடுக்கவேண்டும்.
 பாபாவின் உதியை பாபாவாகவே எண்ணி அதில் நம்பிக்கை கொள்ளுங்கள்...அவர் உங்களது அனைத்து பொருள்சார்ந்த , உடல்சார்ந்த லௌகீகக் கஷ்டங்களையும் நீக்கி உங்களது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஒளியினாலும் சக்தியினாலும் நிரப்பிவிடுவார்.
     பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
    பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
    பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷப்ரதானம்
    பாபா விபூதிம் இதமாஷ்ரயாமி

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...